என் மலர்tooltip icon

    சென்னை

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
    • தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

    தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

    இதனை தொடர்ந்து, இன்று தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • அமித்ஷா பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?
    • தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி என்ற பெயரில் முன்வைத்த வதந்திகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்ட விதத்தைத் தோலுரித்துக் காட்டியதைக் கண்டும், பதில் பேசத் திராணியின்றிச் சட்டமன்றத்தை விட்டே ஓடிய பழனிசாமி,சமூக வலைத்தளத்தில் வந்து கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் காலி இருக்கைகளைப் பார்த்துப் பேசிய வீராதி வீரன் யார்? அன்றைக்குக் காற்றோடு கத்திச் சண்டை போட்டவர், இன்று வெட்டி வசனம் பேசுகிறார்.

    கூவத்தூரில் ஊர்ந்தெடுக்கப்பட்டு, டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துவிட்டு வீரவசனம் பேசுகிறார்.

    சிபிஐ-க்கு பயந்து, அமலாகத் துறைக்கு அஞ்சி, தேர்தல் ஆணையத்திற்கு நடுங்கி பிரதமர் மோடி பின்னாலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?

    கருப்பு பட்டை அணிந்து வந்தது பற்றி சொல்லியிருக்கிறார் பழனிசாமி. வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் இயற்றியது. எங்கே தனது டெல்லி எசமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வழங்கப்பட்ட கருப்பு பேட்ஜைக் கூட வாங்காமல் ஓடிய பயந்தான்கொள்ளிகள், கருப்பு பட்டை பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ.. அமலாகத்துறை வந்துவிடுமோ எனத் தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

    அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பங்கேற்ற மகாமகத்தில் நெரிசலில் சிக்கி 48 பேர் துள்ளத் துடிக்க இறந்து போனார்கள். ''மகாமகத்திற்கு வந்து இறந்து போனதால் அவர்கள் உடனே மோட்சத்திற்குப் போவார்கள்'' எனச் சொன்னவர்கள் எல்லாம், கரூர் நெரிசல் மரணத்திற்குப் பாடம் எடுப்பது வேடிக்கை.

    இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் பழனிசாமி. 41 பேரின் இறப்பில் கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை.

    ஒன்றிய பாஜகவின் அடிமையான பழனிசாமி தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா? எனத் தவம் கிடப்பது அவரது தவிப்பிலேயே தெரிகிறது. ஆனால், அதற்காக இறந்தோரை வைத்து அரசியல் செய்தால் அதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்.

    வெறும் வாட்ஸ்அப் வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தகுதியில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் மயான அரசியல் எடுபடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
    • அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என தகவல்.

    சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தியே.

    அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    • நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
    • முன்கூட்டியே அரிசி பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

    அரிசு குடும்ப அட்டைத்தாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    அரிசியை முன்கூட்டியே அக்டோபரில் பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் அரிசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

    • கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
    • இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது.

    திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

    இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

    அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என கூறினார்.

    • பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர்வரத்து உள்ளது.

    சென்னை புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர் வரத்து உள்ளது.

    3,300 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் 3,006 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அதாவது, 21 அடி உயரம் கொண்ட ஏரியில் நீர்மட்டம் 19 அடி உள்ளது.

    • நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்தவர்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!

    உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும்.
    • 41 பேரில் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி.

    கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், 41 பேரில் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    • 3 மேஜைகளில் 39 உடல்களை குறுகிய நேரத்தில உடற்கூராய்வு செய்தது எப்படி?
    • கரூர் பெருந்துயர சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவோம்.

    * கரூர் பெருந்துயரம் நிகழ்ந்த உடன், பதற்றத்துடன் அவசரமாக உடற்கூராய்வு நடைபெற்றது.

    * 3 மேஜைகளில் 39 உடல்களை குறுகிய நேரத்தில உடற்கூராய்வு செய்தது எப்படி?

    * இவ்வளவு வேகமாக எப்படி உடற்கூராய்வு செய்திருக்க முடியும்?

    * ஒருநபர் கமிஷனுக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை.

    * வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு ஒரு நபர் ஆணையத்திற்கு உதவியாளர் கூட இல்லை.

    * அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்த பிறகு, ஒருநபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக, நேர்மையாக செயல்படும்.

    * கிட்னி முறைகேடு உறுதி செய்யப்பட்ட பிறகும், அரசு அவசரமாக செயல்படாதது ஏன்?

    * கிட்னி முறைகேடு வழக்கில் ஏன் அக்கறை காட்டவில்லை.

    * கரூர் பெருந்துயர சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது.

    * முதலமைச்சருக்கு உள்ள அதே உணர்வோடு தான் நானும் பேசுகிறேன்.

    * கிட்னி முறைகேடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    * ஏன் இந்த பயம்? ஏன் பதற்றம்? முதலமைச்சர் முன்கூட்டியே பேசியது ஏன்?

    * சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பயம், பதற்றம்.

    * கரூர் துயரத்தின்போது தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்சுகள் வந்தது எப்படி?

    * கரூர் சம்பவத்தில் அரசியல் செய்வது யார்?

    * கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் அரசியல் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை 16-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் பகல் 1.25 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

    இந்த ரெயில் 17-ந் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகிறது. இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் 17, 18-ந்தேதியில் சென்ட்ரலில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்று அடைகிறது. 18-ந்தேதி போத்தனூரில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.10 மணிக்கு சென்ட்ரல் வந்து அடைகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    • ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
    • வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் சென்று பஸ் ஏறுவார்கள். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை அதிக கூட்ட நெரிசல் காணப்படும்.

    இதைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வருகிற 17-ந் தேதி 3 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7.45, 7.53, 8.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இதே போல் வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி வருகிற 22-ந்தேதி காட்டாங்கொளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    • கரூரில் த.வெ.க. தலைவர் பிரசாரத்தை டி.வி.யில் பார்த்தேன். 500 போலீசார் எங்கும் தென்படவில்லை.
    • தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்ற இடத்தை த.வெ.க.விற்கு வழங்கி இருக்கலாம்.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 4 மாவட்டங்களில் ஏற்கனவே விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    * த.வெ.க.வினர் கேட்ட இடத்தையும் அரசு கொடுக்கவில்லை.

    * கரூரில் த.வெ.க. தலைவர் பிரசாரத்தை டி.வி.யில் பார்த்தேன். 500 போலீசார் எங்கும் தென்படவில்லை.

    * கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு என ஏடிஜிபி கூறுகிறார். முதலமைச்சர் 600 காவலர்கள் என்கிறார்.

    * கரூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் எண்ணிக்கையில் முரண் உள்ளதால் சந்தேகம் எழுகிறது.

    * வேலுச்சாமிபுரத்தில் குறுகிய சாலை என்பதால் பொதுக்கூட்டம் கூடாது என நிராகரித்தார்கள்.

    * வேலுச்சாமிபுரத்தை தகுதியற்ற இடம் என நிராகரித்துவிட்டு த.வெ.க.வுக்கு கொடுத்தது ஏன்?

    * விஜய் பிரசாரத்திற்கு வேலுசாமிபுரத்தை ஒதுக்கியது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    * கரூரில் எனது பிரசாரத்திற்கு அ.தி.மு.க.வினர் கேட்ட இடம் வேறு, கொடுக்கப்பட்ட இடம் வேறு.

    * கரூரில் முன்னதாக துணை முதலமைச்சர், முதலமைச்சர் பேசிய இடத்தில் எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

    * கரூர் ரவுண்டா பகுதியில் துணை முதலமைச்சர், எம்.பி. கனிமொழி பேசி உள்ளனர். அங்கு விஜய் பிரசாரத்திற்கு அனுமதி தராதது ஏன்?

    * அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்று தான் த.வெ.க.வுக்கு வேலுச்சாமிபுரத்தில் அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

    * தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்ற இடத்தை த.வெ.க.விற்கு வழங்கி இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×