என் மலர்
சென்னை
- ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அஇஅதிமுக-விடம் எத்தனை அடி வாங்கினாலும்,
- "இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்" என்று Wanted-ஆக வண்டியில் ஏறுவதே இந்த ஒட்டுண்ணியின் வேலையாக மாறிவிட்டது.
அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதிலடி, பொம்மை முதல்வரை கதற விட்டிருக்கிறது போலும். வழக்கம்போல தனது ஆஸ்தான கொத்தடிமை ரகுபதியை ஏவிவிட்டு, பதில் தருகிறேன் என்ற பெயரில் புலம்பித் தள்ளியுள்ளார்.
ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அஇஅதிமுக-விடம் எத்தனை அடி வாங்கினாலும், "இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்" என்று Wanted-ஆக வண்டியில் ஏறுவதே இந்த ஒட்டுண்ணியின் வேலையாக மாறிவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெயர் மட்டும்தான் வைத்தோமாம். எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத்தான் தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாத மக்கு மந்திரிதான் ரகுபதி.
எடப்பாடி பழனிசாமியின் பதிவில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியைப் பற்றி பேசியதை Convenient-ஆக மறந்துவிட்டீர்களே ஒட்டுண்ணி ரகுபதி?
உங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பரிதாபமாக உயிரிழந்த போது நீங்களோ, உங்கள் பொம்மை முதல்வரோ கள்ளக்குறிச்சி பக்கம் கால் வைத்தீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு இருந்ததா? அப்போதெல்லாம் பங்கருக்குள் ஓடி ஒளிந்துகொண்டு, இப்போது தேர்தல் ஜூரத்தில் மேடை போட்டு காலரைத் தூக்க உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
அஇஅதிமுக ஆட்சியால் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல், சேலம் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் வரை கருணாநிதி பெயரைக் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிய கொத்தடிமைக் கூட்டமெல்லாம், எங்களைப் பற்றி பேசுவதா?
இன்றைய தினம் இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது யாரால்?
தேர்தல் வாக்குறுதி எண்- 311-ஐ நிறைவேற்றாத உங்களால் தானே?
செவிலியர்கள் போராடுவது யாரால்?
தேர்தல் வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்றாத உங்களால் தானே?
தூய்மைப் பணியாளர்கள் போராடுவது யாரால்?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக-வால் தானே?
அரசு ஊழியர்கள் போராட்டம் யாரால்?
"பழைய ஓய்வூதிய திட்டம்" (வாக்குறுதி எண்: 309) என்று வாய்கிழிய பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாற்றிப் பேசும் உங்களால்தானே?
அது சரி, வேட்டியை மாற்றியதும் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, கொத்தடிமையாக மாறிய மங்குனி அமைச்சர் ரகுபதி போன்றோர் இருக்கும் கட்சிதானே திமுக? இவர்கள் நடத்தும் விடியா ஆட்சி வேறெந்த லட்சணத்தில் இருக்கும்?
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட முடியாத, மாஸ்க் அணிந்துகொண்டு வாழ்ந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் லேப்டாப் கொடுக்கவில்லை என்று ரகுபதி கேட்பதெல்லாம், திமுக என்ற மங்குனிகளின் கூடாரம் எவ்வளவு பெரிய முட்டாள்களை வைத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
"வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டுமா?" என்கிறார் அமைச்சர் மா.சு. "5 ஆண்டுகள் ஆகும் போதுதான் நிறைவேற்றுவோம்" என்கிறார் ரகுபதி. நாங்கள் கேட்கிறோம்- உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பதே இல்லையா?
2025 கடைசியில் வந்து, கல்லூரி கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் கொடுக்கிறீர்களே... 2021-22, 2022-23, 2023-24, 2024-25 என இத்தனை கல்வியாண்டுகள் லேப்டாப் கிடைக்காமல் போன அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாவம் இல்லையா? லேப்டாப் கிடைக்காத தற்போதைய கல்வியாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன கிள்ளுக்கீரையா?
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி பேசும் பேச்சா இதெல்லாம்? இவருக்கெல்லாம் சட்ட அமைச்சர் என்ற பொறுப்பு வேறு- வெட்கக்கேடு!
சீனியர் கொத்தடிமை ரகுபதி அவர்களே- உங்கள் தலைவருக்கு, அதான்.. அந்த ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வருக்கு.. தெம்பு, திராணி, வக்கு, வகையிருந்தால் சட்டப்பேரவையை முழுமையாக நேரலையில் காட்டச் சொல்லுங்கள். நேருக்கு நேர் நின்று பேசுவது யார், சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் தொடைநடுங்கி பொம்மை யார் என்பதை தமிழக மக்களும் பார்த்து ரசிப்பார்கள்! சிரிப்பார்கள்!
இவர்தான் இப்படி என்றால், ஸ்டாலினின் தங்கையான கனிமொழியோ, "எடப்பாடியாருடன் விவாதம் செய்ய ஸ்டாலினுக்கு நேரம் இல்லை" என்று ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.
வாக்கிங் போக, போட்டோஷூட் எடுக்க, சினிமா பார்க்க, அதற்கு ரிவ்யூ எழுத, இன்பச் சுற்றுலா போக என இதற்கெல்லாம் நேரம் இருக்கும் பொம்மை முதல்வருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு நேருக்கு நேர் நின்று பதில் சொல்ல மட்டும் நேரம் இல்லையோ?
அப்படியே நேரம் இல்லாதவர்தான் என்றால், அப்புறம் எதுக்கு OPEN CHALLENGE என்று வாய் சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் உங்கள் அண்ணன்?
அவ்ளோ பயம் இருக்குல்ல...
அதை அப்படியே Maintain பண்ணுங்க!
இவ்வாறு அதிமுக கடுமையாக சாடியுள்ளது.
- காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
அந்த வகையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 100-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை 1680 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 31 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 285 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560
24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
25-12-2025- ஒரு கிராம் ரூ.245
24-12-2025- ஒரு கிராம் ரூ.244
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் போதுமா? பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்துவிடுமா?
- மாவட்டத்தை உருவாக்கினால், அதனை நிர்வகிக்கக் கட்டடம் வேண்டாமா?
அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பதில் தருவதாக நினைத்து, உளறிக் கொட்டியிருக்கும் அடிமை எதிர்க்கட்சித் தலைவரே…
திமுக அரசு விஷயம் என்றால், முழித்துக் கொள்வதும், ஒன்றிய அரசு விவகாரமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்வதும் என உங்கள் செயல்பாடு உருமாறுவது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? அமித் ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் அடிமை பழனிசாமி, சூனா பானா வேடம் தரிக்கிறார்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் போதுமா? பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்துவிடுமா? அந்தக் குழந்தைக்குச் சத்தான உணவைத் தர வேண்டாமா? மாவட்டத்தை உருவாக்கினால், அதனை நிர்வகிக்கக் கட்டடம் வேண்டாமா?
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகத்தை வைத்துவிட்டுப் போனீர்கள். திமுக அரசு வந்த பிறகுதான் 2024 செப்டம்பரில் கலெக்டர் பிரசாந்தால் புதிய கலெக்டர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எதையும் டிவியை பார்த்துத் தெரிந்து கொள்ளும் பழனிசாமிக்கு இது தெரியாதா? அப்படி அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்ததும் ஏன் எரிகிறது?
அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுகிறோம் என்கிறார் பழனிசாமி. 2015-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, தனியாரும் தன்னார்வலர்களும் அளித்த நிவாரணப் பொருட்களில் எல்லாம் தேடித்தேடி ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டியவர்கள்தானே நீங்கள்!
பட்ஜெட் சூட்கேஸ், குதிரை, குழந்தை, மணமக்கள் என எதையும் விட்டு வைக்காமல் அவர்கள் மீதெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி தமிழ்நாட்டின் மானத்தை அகில உலகிற்கும் காட்டியவர்களுக்கு எப்போதும் ஸ்டிக்கர் பற்றிய நினைப்புதான் இருக்கும்!
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கிரானைட் கொள்ளை, கொடநாடு கொலைகள், கூவத்தூர் கூத்துகள், மவுலிவாக்கம் கட்டட விபத்து, மக்கள் நலப் பணியாளர்கள் போராட்டம், தர்மபுரி கலவரம், சாத்தான்குளம் இரட்டை மரணம், நிர்மலாதேவி விவகாரம், ஜல்லிக்கட்டு போராட்டம் என சந்தி சிரித்தது எல்லாம் யாருடைய ஆட்சியில்?
இதில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தாராம். உங்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? இன்னும் பட்டியல் போட முடியும். நீங்கள் மூச்சு இரைக்க வாசிக்க வேண்டியிருக்கும் என்பதால் குறைத்துச் சொல்லியிருக்கிறோம்.
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று சொன்னதும் பழனிசாமியின் அடிவயிறு ஏன் எரிகிறது? தேர்தல் வாக்குறுதி என்பது 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவது. அதனை ஏன் நான்கரை ஆண்டுகள் கழித்துக் கொடுக்கிறீர்கள்? எனக் கூச்சமே இல்லாமல் கேள்வி எழுப்புகிறார் பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தை நாங்கள் முடக்க நினைக்கவில்லை. அதனால்தான் அந்தத் திட்டத்தைத் தொடர்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு வரை மட்டுமே அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தையே முடக்கிவிட்டு பேச்சை பாருங்க… எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..!
'என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத்தயாரா? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?' என கேட்டிருக்கிறார். இதற்கு எதற்கு மேடை போட வேண்டும்?
சட்டமன்றத்தில்தான் நேருக்கு நேர் பேசலாமே! அங்கே முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் வெளிநடப்பு என புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு Open challenge என பீலா தேவையா?
இவ்வாறு அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
- திருப்போரூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது சுற்றுப்பணத்தை அவர் முடித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்த பிறகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி தனது பலத்தை அங்கும் காட்டினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது பிரசாரத்தை முடித்துள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மாலையில் 176-வது தொகுதியாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக திருப்போரூர் அருகில் உள்ள தையூர் பகுதியில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மேடையில் எடப்பாடி வருவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வரும் பஸ்சில் இருந்தபடியே பேசுகிறார்.
திருப்போரூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். பிரதான சாலையில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்து உள்ளார். 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலி இடம் ஒன்று தயார் செய்யபபட்டு உள்ளது.
எடப்பாடி பழனசாமி வேனில் நின்று பேசுவதற்கான இடமும், பொதுமக்கள் திரண்டு நிற்பதற்கான இடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாலை நேரத்தில் வருவதால் அந்த பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளன.
பெருங்குடியில் இருந்து பிரசாரம் நடைபெறும் எம்.ஜி.ஆர். சாலை வரை வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வழிநெடுக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நாளை மறுநாள் திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
திருத்தணி அருகே உள்ள வீரகநல்லூர் பகுதியில் (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வதற்காக மைதானம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சில் இருந்தபடியே அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர் அருகில் உள்ள திடலில் மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
இதன் பிறகு சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரப்பேட்டையில் திறந்தவெளி மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளும் 180-வது சட்டமன்ற தொகுதியாகும்.
இதுவரை 6 கட்டங்களாக தனது பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ள எடப்பாடி பழனிசாமி 7-வது கட்டமாக சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் நாளை முதல் சுற்று பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமர வேல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, சிறுணியம் பலராமன், திருத்தணி கோ. அரி, ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நாளைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.
- பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன் என்பதை வேடிக்கை பார்க்க முடியாது.
திருச்சி:
பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளளாரே?
பதில்: தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் ஒரு கூட்டணியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என கூறுவது நகைப்புக்குரியது.
கேள்வி: கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு. தற்போது உங்கள் நிலைப்பாடு?
பதில்: இதற்கு ஏற்கனவே பலமுறை பதில் தெரிவித்து விட்டேன். ஒரு கட்சி முன்கூட்டியே வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல. உரிய நேரத்தில், முறைப்படி முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவோம். சில நிலைப்பாடுகளை காலம், நேரத்தை கருத்தில் கொண்டுதான் எடுக்க முடியும்.
கேள்வி: பா.ம.க., தி.மு.க. கூட்டணிக்கு வரும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
கேள்வி: தொடர்ந்து செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்களே?
பதில்: செவிலியர்களுக்கான போராட்டம் முடிந்து விட்டது. அதற்கு அமைச்சர் பணி நிரந்தரமும் குறித்தும் தெரிவித்துவிட்டார். தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். தொடர்ந்து அதே கோரிக்கை இப்போதும் முன் வைக்கிறேன். அதனை முதலமைச்சர் பரிசிலீக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவு அளித்துள்ளோம்.
கேள்வி: தி.மு.க.வில் தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பது போல தாங்கள் பேசியிருப்பது குறித்து?
பதில்: தி.மு.க.வுக்கு சிலர் பரிந்து பேசுகிறோம் என்றும், முட்டுக் கொடுக்கிறோம் என்றும் விமர்சனங்கள் வெளிப்படையாக வருவதால், நாங்கள் அதற்காக பேசவில்லை. கருத்தியலுக்காக பேசுகிறோம். நாங்கள் உள்வாங்கிக் கொண்ட சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியல். அதுதான் எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண் டாம் பட்சம்தான் என்பதை சொல்வதற்காக அதனை அழுத்திக் கூறினேன்.
கேள்வி: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர் மீது தேவாலயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது?
பதில்: இதற்காகத்தான் பா.ஜ.க. வளரக்கூடாது என்று சொல்கிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்துவ மக்கள் மீதும், கிறிஸ்துவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதுதான் பாசிசம் என்பதற்கு சான்று. இப்படி நடக்கும் என்று பிரதமருக்கு தெரியும். இதை திசை திருப்பவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
ஒருபுறம் சனாதான சக்திகள் தாக்குதல் என்ற ஒரு அவலம் நடக்கிறது. மறுபுறம் மதவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புக்கள் துணை போகிறது. அவர்கள் மத வெறியர்களை காலூன்று வைக்க போகிறார்கள். மற்ற மாநிலங்களில் நடந்த அவலம் தமிழ்நாட்டிலும் நடக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே, அ.தி.மு.க. தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அ.தி.மு.க. இல்லாமல் போய்விடும், பெரியார் அரசியலும் காணாமல் போய் விடும். நான் பெரியாரின் பிள்ளை, அம்பேத்கரின் பிள்ளை. சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும், விஜய்யும் செயல்படுகிறார்கள் என்பதை கூறுகிறேன். அவர்கள் அரசியல் போக்கும், செயல்பாடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ மக்களின் மீதான தாக்குதல் பற்றி இதுவரை விஜய் வாய் திறந்து உள்ளாரா? கொள்கை எதிரி என்றால் கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறதா, இல்லையா. அவர்களை கண்டிக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருக்கிறது.
பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன் என்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இது சாதாரண அரசியல் அல்ல, பெரியார் அரசியல் என்பது எளிய மக்களின் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல். அதனை தகர்ப் பேன் என்பது எப்படிப்பட் டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அரசியல். அவர்கள் பிராமணர்களின் கடப்பாரையை எடுத்து செயல்பட போகிறாரார்களா, அல்லது அவர்கள் பிராமணர்களுக்கு கடப்பாரையாக மாறப்போகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பேசுவது சனாதான அரசியல் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இது தி.மு.க. அரசியலுக்கு எதிரான கருத்தல்ல, எல்லோரும் பேசுகிற கருத்திற்கு எதிரானது. தி.மு.க.விற்காக நான் பேச வில்லை, நாங்கள் பேசுகிற அரசியலுக்கு எதிரான கருத்தாகும்.
கேள்வி: தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்தார்?
ப: பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலை பேச கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து.
- கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் ஆகும். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் காங்கிரசுக்கு சிக்கல்கள் உருவானது.
அதனால்தான் முன்கூட்டியே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.
எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து. அதேபோல்தான் திருச்சி வேலுசாமி கூறி இருப்பதும் அவரது கருத்துதான். காங்கிரசின் கருத்து அல்ல.
கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும். ஆசிரியர்கள், நர்சுகள் போராட்டத்திலும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், சுமதி அன்பரசு, தாம்பரம் நாராயணன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராம்மோகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் முத்தழகன், டி. என்.அசோகன், புத்தநேசன், ஜி.தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.
- 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா?
- பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே...
நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!
அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே-
நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.
இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!)
அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?
அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?
OPEN CHALLENGE IS STILL ON! என்று கூறியுள்ளார்.
- பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
- காலம் காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார்.
சென்னை:
சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமானிடம், நீங்களும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்து உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த போது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தார்.
மேலும் காலம் காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார். அண்ணன்தானே பேசுகிறார். அதனை விடுங்கள் என்றார்.
- சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.
குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றினர்.
- தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
- வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 274 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560
24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
25-12-2025- ஒரு கிராம் ரூ.245
24-12-2025- ஒரு கிராம் ரூ.244
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
- நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
- குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.
பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.
- ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
- 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 79 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை வழங்கி பயனடையலாம்.






