என் மலர்
சென்னை
- காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார்.
காவலர் வீரவணக்க நாளையொட்டி காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார். காவல்துறையின் தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கினார்.
- காஷ்மீரின் உரிமைகளுக்காக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.
- பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
காஷ்மீரின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்பட்டு வருவதற்கு எதிரான காஷ்மீரின் குரலின் அடையாளமாக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரளா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதன் காரணமாக வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.
- சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது.
- காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு.
சென்னை:
தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள பகுதிகளில் பதிவான காற்றின் தரக்குறியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு பெருங்குடியில் 229 ஆக பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மணலியில் 175, மணலி நியூ டவுன், வேளச்சேரியில் தலா 152, அரும்பாக்கம் 146, ஆலந்தூர் 127, அம்பத்தூரில் 100 ஆக பதிவாகி உள்ளது.
அதிகமாக பட்டாசுகளை வெடித்ததால் ஆபத்தான நிலையில் காற்றின் தரக்குறியீடு உள்ளதால் காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
- 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது. மழை குறுக்கிட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில், நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 108 ஆம்புலன்ஸுகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 4,635 அழைப்புகள் வந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 61 சதவீதம் வந்த கூடுதல் அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என்றும் அதில் 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாகவும் ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
- தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து வருகிறது.
- விளைவில் 1 சவரன் தங்கம் விலை லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவே மாறிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை மாலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கும் , ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீபாவளியை பண்டிகையான இன்று தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்குப் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600
16-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,200
15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880
14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-10-2025- ஒரு கிராம் ரூ.190
17-10-2025- ஒரு கிராம் ரூ.203
16-10-2025- ஒரு கிராம் ரூ.206
15-10-2025- ஒரு கிராம் ரூ.207
14-10-2025- ஒரு கிராம் ரூ.206
- தீபாவளி முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாதவது:-
இருள் இன்றுடன் விலகட்டும்,
மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!
இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
- எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறான செய்தி என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகர், தேனியில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எந்தளவு மழை பெய்தாலும் பாதிப்புகளை தவிர்க்க தயாராக உள்ளோம்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை அதிகளவில் பெய்த மாவட்டங்களில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சொல்வது தவறான செய்தி.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
- வரும் 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாவதாக தகவல்.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.






