search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள் கட்டமைப்பு பணிகள்  தீவிரம்
    X

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

    • நிலைய மாஸ்டர் அறை துவங்கி முன்பதிவு மையம் வரை பிளாட்பார்ம் குறுகலாக உள்ளது.
    • மாநகராட்சியிடம் தேவையான உதவிகள் கேட்கப்பட்டுள்ளது என்றனர்.

    திருப்பூர் :

    ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி,ரெயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு தெற்கு ரெயில்வேக்கு 1,081 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையை கொண்டு 59ரெயில்வே நிலையங்களில் உள்கட்டமைப்பு பணி மேம்படுத்தப்படுகிறது. பட்டியலில் திருப்பூர் இடம் பெற்றுள்ளதால் முதல்கட்டமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை விஸ்தரிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நிலைய மாஸ்டர் அறை துவங்கி முன்பதிவு மையம் வரை பிளாட்பார்ம் குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் அதிக பயணிகள் வரும் போது ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வது போன்ற சூழல் ஏற்படுகிறது.பிளாட்பார்மில் ரெயில் நின்று விட்டால் ரெயிலை விட்டு இறங்கும் போது ரெயிலில் ஏறும் போது பயணிகளுக்கு சிரமம் தவிர்க்க முடியாததாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் முயற்சியாக பிளாட்பார்ம்2 முதல் 4 மீட்டர் வரை விரிவாக்கப்பட உள்ளது. இதற்கான அளவீடு பணி 2 வாரமாக நடந்து வருகிறது.

    தற்போது ஒரு லிப்ட் கிழக்கு புறத்தில் உள்ள நிலையில், மேற்குபுறத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துடன் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் மற்றொரு லிப்ட் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடமாநிலங்களுக்கு செல்வோர் முன்பதிவு டிக்கெட் பெற்று, ரெயில் நிலையம் வருவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே பிளாட்பார்ம் வந்து காத்திருக்கின்றனர்.

    15 ஆண்டுகளுக்கு முன்கட்டிய ஓய்வறை வசதி போதியதாக இல்லாததால் ஓய்வறை மற்றும் கழிப்பிடத்தை இடித்து கூடுதலாக பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் ரெயில் நிலையத்தின் பயணிகள் தேவை குறித்து அறிந்து அவ்வப்போது தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.நாள் ஒன்றுக்கு 34ரெயில்கள், 6 வாராந்திரரெயில்கள், நான்கு பாசஞ்சர் கடந்து செல்கிறது. தினசரி 5,000 பயணிகள் விடுமுறை நாட்களில் 8,000 பேர் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக இருபுற நுழைவு வாயில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் போலீசார் பணிஅமர்த்தப்பட உள்ளனர். குடிநீர், சுகாதாரம் பெரிய சவாலாக உள்ளது. மாநகராட்சியிடம் தேவையான உதவிகள் கேட்கப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×