search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, குமாரசாமி பேட்டையில்   கோவில் நிலங்களுக்கு சொந்தமான   9 கடைகளுக்கு வாடகை பாக்கியால் சீல் வைப்பு-  அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
    X

    கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள போது எடுத்தபடம்.

    தருமபுரி, குமாரசாமி பேட்டையில் கோவில் நிலங்களுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு வாடகை பாக்கியால் சீல் வைப்பு- அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

    • கோவில்களுக்கு சொந்தமான கடைகளுக்கு பல வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
    • 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த குமாரசாமி பேட்டையில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோவி ல்களுக்கு சொந்தமான 5,188 சதுர அடி காலிமனை மற்றும் 9 கடைகள் வெள்ளைக் கவுண்டன்பாளையம் என்ற ஊரில் உள்ளது.

    இந்த கடைகளில் தொழில் செய்து வருவோர் பல வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை பாக்கியை செலுத்துமாறு பலமுறை அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தியும் அவர்கள் செலுத்தவில்லை. இதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை தருமபுரி மாவட்ட அறநிலையத்துறை ஆணையர் உதயகுமார் தலைமையில் செயல் அலுவலர் சபரீஸ்வரி, அறநிலையத்துறை தனி தாசில்தார் சேதுலிங்கன், கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன் மற்றும் போலீசார் ஆகியோர் அந்த கடைகளை பயன்படுத்தி வந்தவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×