என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தோப்பேரியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது.
பாலத்தின் கீழ் போடப்பட்டிருந்த குழாய்கள் வழியாக தண்ணீர் அதிக அளவில் சென்றதால் தற்காலிக பாலம் தண்ணீரில் கரைந்தது. அந்த சமயம் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.
இரவு நேரம் என்பதால் அருகில் வந்தபோது தான் பாலம் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. டிரைவர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள், துண்டிக்கப்பட்ட பாலத்தின் பள்ளத்தில் பஸ் விழுந்து சிக்கிக்கொண்டது.
இதனால் பஸ்சுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். இதுபற்றிய தகவலை பயணிகள் செல்போன் மூலம் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு பஸ்சுக்குள் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சு வேன் மூலம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக செந்துறை ஆர்.எஸ்.மாத்தூர்-பெண்ணாடம் சாலை துண்டிக்கப்பட்டதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்கள் குழுமூர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அம்மனிகுட்டை தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவந்தி வயது (27) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலையில் குழந்தைகள் பள்ளிக்கு போய் விட்டனர். சிவந்தி 100 நாள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த பார்த்தபோது பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த சிவந்தி அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 54 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டுப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுயிருந்தது. இதுகுறித்து இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் சிவந்தி புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துகொண்டு பட்டப்பகலில் வீட்டின் புட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டில் சம்பந்தப் பட்டவர்கள் உள்ளுரைச் சேர்ந்தவர்கள் அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்நிலையில் பெரம்லூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரங்கள் மற்றும் சில மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் ஒருவரது வீட்டின் மீது மரமும், மின்கம்பமும் விழுந்தன.
சாலையோரங்களில் உள்ள மரங்களும், மினகம்பங்களும் சாலையின் ஓரத்தில் விழுந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பலத்த மழை பெய்ததால் கிராமங்களில் உள்ள தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், கிராமத்திற்குள்ளும் சில மின்கம்பங்கள் சாய்தன. இதனால் பலரது வீட்டு மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் அகிலா, ஜெயராஜ், மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவைகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி (31). அழகுதுரை தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்றும் அவர் மது குடிப்பதற்காக கலைச்செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு கலைச்செல்வி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திர மடைந்த அழகுதுரை, கலைச்செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கலைச்செல்வி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் அழகுதுரை, தன்னிடம் மது குடிப்பதற்காக தன்னை அடித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுத்துச் செல்வதற்கு லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவு எண்ணை ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ள 7.8.2017 முதல் 11.8.2017 வரை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கூத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறப்படும் பகுதியான அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லி நகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி,
கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர் மற்றும் துங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. பின்னர் ஒரு கடையை உடையார்பாளையம் - இடையார் செல்லும் சாலையில் தொடக்கி வியாபாரம்செய்து வருகின்றனர். தற்போது புதிதாக மற்றொரு கடை தொடங்குவதற்காக இடம் பார்த்து ஊருக்குள் வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனை அறிந்த பொது மக்கள் ஏற்கனவே வைக்கப்பட்ட கடையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இடையார், ஏந்தல், வாணதிரையன்பட்டிணம் போன்ற கிராமங்களிலிருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்கு வந்து சேர முடியவில்லை. ஒவ்வொருநாளும் பயந்து பயந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் புதிய கடையும்திறக்க கூடாது பழைய கடையையும் அகற்ற வேண்டும் என கூறி உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கவேண்டும். இப்படி சாலைமறியலில் ஈடுபடகூடாது. உங்களது கோரிக்கைகளை நாங்களும் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்ககின்றோம் என கூறியதும் அனைத்து மக்களும் கலைந்து மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்றனர். கூட்டத்தை பார்த்ததும் பேருந்துகள் மாற்று பாதையில் சென்றனர். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் குழுவினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 2 பேரூராட் சிகள், 201 கிராம ஊராட்சிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். அரியலூர் பஸ்நிலையம், ராஜாஜி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட அரியலூர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டு சாமிநாதன், சகாயம், பிரதாப்சிங், சதீஷ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் சேர்த்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக 100 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பண்டல் பண்டலாக புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டன.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியை சேர்ந்த தாதம் பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணி நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அத்திட்ட தொழிலாளர்கள் அங்குள்ள பொன்னாற்று கரை பகுதியில் முட்களை அகற்றி தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து திடீரென கிளம்பிய கதண்டுகள் நாலாபுறமும் பரவி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கடித்தன. இதனால் நிலைகுலைந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். அவர்களை கதண்டுகள் துரத்தி, துரத்தி கடித்தன. இதில் காயமடைந்த தாதம் பேட்டை மற்றும் பாலசுந்தர புரம் பகுதிகளை சேர்ந்த பொட்டு (வயது58), இந்திரா காந்தி (40), சின்னையன்(70), மணி(65), வீரம்மாள்(67), நீலாவதி(50), சந்திரலேகா(50) உள்பட 25 பேரை அங்குள்ளவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தா.பழூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்த தொழிலாளர்களுக்கு, தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தெட்சிணா மூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக மணி என்ற பெண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், ஜாகீர் உசேன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங் கோவன் ஆகியோர் பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகள் கனகவள்ளி (வயது 25). இவருக்கும், உடையார்பாளையத்தை சேர்ந்த அருணுக்கும்(30) 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருண் மது குடித்து விட்டு, அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கனகவள்ளி கோபித்து கொண்டு, கடந்த ஆண்டு தனது தாய் வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் சென்னையிலுள்ள ஒரு துணிக்கடையில் கனகவள்ளி வேலை செய்தார்.
பின்னர் அருண் கனகவள்ளியை சமாதானம் செய்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். இந் நிலையில் கனகவள்ளி மாயமானார். இது குறித்து கனகவள்ளி சகோதரர் மணிவண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சென்னை சேலையூர் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், குடும்பத்தகராறில் உறவினர் கார்த்திக்குடன் சேர்ந்து தனது மனைவி கனகவள்ளியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை குவாகம் அருகேயுள்ள கொங்கனார்கோவில் காட்டுப்பகுதியில் புதைத்து விட்டதாகவும் அருண் தெரிவித்தார்.
இதையடுத்து கனகவள்ளியின் உடலை போலீசார் தேடினர். நேற்று மாலை 4.30 மணியளவில் கொங்கனர் சித்தர் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள முந்திரி காட்டில் தோண்டி பார்க்கும் போது அதில் மண்டை ஓடு, உடல் உறுப்புகளின் எலும்புகள், பெண்ணின் தலைமுடி, சேலைதுணிகள், தாலி, உள்ளிட்டவை கிடைத்துள்ளது.கிடைத்த உறுப்புகளை சேகரித்துகொண்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர்.
கனகவள்ளியை கொலை செய்த அவரது கணவர் அருண், உறவினர் கார்த்திக் ஆகிய 2 பேரையும் சேலையூர் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாங்குளத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மகள் கனகவள்ளி (வயது 25). இவருக்கும் உடையார் பாளையத்தை சேர்ந்த தங்க ராசுவின் மகன் அருண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு பரணி (2) என்ற குழந்தை உள்ளது. அருணுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தாகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் கனகவள்ளி கணவருடன் கோபித்துக்கொண்டு கல்லாங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் சென்னை தாம்பரம் அருகே சீனிவாசபுரத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே அருண் தனது மனைவியை தேடி கல்லாங்குளம் சென்றார். அப்போது அவர் சென்னையில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. உடனே காரில் அருண் மற்றும் அவரது தந்தை தங்கராசு, தாய் மற்றும் அவரது உறவினர்கள் விஜயா, அவரது மகன் கார்த்திக் ஆகிய 5 பேர் சென்னைக்கு சென்றனர்.
அங்கு கனகவள்ளியிடம் சமாதானம் பேசி சொந்த ஊருக்கு காரில் அழைத்து வந்தனர். இதற்கிடையே கனகவள்ளி திடீர் என மாயமானர். இது குறித்து அருண் சென்னை சேலையூர் போலீசில் புகார் செய்தார். நாங்கள் காரில் அழைத்து வந்தபோது குழந்தைக்கு பால் வாங்க சென்றுவருவதாக கூறிய கனகவள்ளி திடீரென மாயமாகி விட்டதாக அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
அதேபோல் கனகவள்ளியின் சகோதரர் மணிவண்ணன் தனது சகோதரியை காணவில்லை என உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கோர்ட்டு சேலையூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கனகவள்ளியின் கணவர் அருணிடம் நடத்திய விசாரணையில் கனகவள்ளியை கொலை செய்து விட்டதாக அருண் அதிர்ச்சி தகவலை கூறினார்.
மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் நாங்கள் கனகவள்ளியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு சமாதானம் பேசி காரில் ஊருக்கு அழைத்து வந்தோம். வரும் வழியில் அவரை கொலை செய்து புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் கனகவள்ளியை உடையார்பாளையம் ஊரின் அருகே சுமார் 10 கி.மீ. தூரத்தில் கொன்று புதைத்தாக கூறினார். நேற்று போலீசார் பல இடங்களில் தேடினர். ஆனால் கனகவள்ளியின் உடல் கிடைக்கவில்லை. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.
சேலையூர் போலீசாருடன் குவாகம் போலீசாரும் அருணுடன் சென்று தேடினர். இந்த நிலையில் இன்று குவாகம் அருகே கொன்று புதைக்கப்பட்ட கனகவள்ளியின் உடல் கிடைத்தது. பின்னர் அருண், அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவான அருணின் தந்தை தங்கராசு உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள நாகம்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50), விவசாயி. இவர் தனது வீட்டில் சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு முடிவு செய்தார்.
இதற்காக ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகத்தில் திட்ட வட்டார ஒருங்கினைப்பாளராக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ரத்தினசிகாமணியை அணுகினார். அவரிடம் தனக்கும், தனது உறவினருக்கும் சேர்த்து தனிநபர் கழிவறை கட்டுவதற்கான மானியம் பெற இரண்டு விண்ணப்பங்கள் வாங்கினார்.
கழிவறை கட்டுவதற்கு அரசு மானியம் ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை பெறுவதற்காக ஒரு கழிவறைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு பேருக்கும் சேர்த்து ரூ.4 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று அதிகாரி கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதாகிருஷ்ணன் அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று ராதாகிருஷ்ணன் ரத்தினசிகாமணியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ் பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் ரத்தின சிகாமணியை கையும், களவுமாக கைது செய்தனர். அவரை விசாரணைக்காக அரியலூருக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆண்டிமடம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
திறந்தவெளி கழிப்பிடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு செயல் படுத்தி வரும் கழிவறை மானிய திட்டத்திலும் லஞ்சத்தை எதிர்பார்க்கும் அதிகாரிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூடியிருந்த பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினர்.






