search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் நிறுத்தம்"

    • பல கிராமங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது.
    • குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டம்:

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து முழுவதும் மீள முடியவில்லை.

    பல கிராமங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது. குளங்களில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் மின்சார வினியோகம் சீராக வில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக கிராம மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் இன்னும் சில பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளும், மீட்பு குழுவினரும் செல்ல முடியாத நிலையே நீடித்து வருகிறது.

    இதற்கிடையே தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆழ்வார் திருநகரியில் ஆற்றின் நடுவில் இருந்த உயர்அழுத்த மின்கம்பத்தை தண்ணீர் வாரி சுருட்டி சாய்த்தது. அந்த மின்கம்பத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறி பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு, கீழ ஆழ்வார் தோப்பு, சிவராம மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மழை நின்று 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறையவில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக கிராம மக்கள் தொடர்ந்து மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகிறார்கள். மின்சாதன பொருட்கள், மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    ஏற்கனவே செல்போன் நெட்வொர்க் இன்னும் சீராக இல்லாததால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமலும், வெளி உலக தொடர்பு இல்லாமலும் கிராமம் தனித் தீவாக மாறிவிட்டன. அவர்களால் அடிப்படை வசதிகள், நிவாரண பணிகள் மற்றும் தேவைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க கூட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள கோவிலில் இருக்கும் ஒரே ஒரு ஜெனரேட்டரை இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இயக்கி அதில் செல்போன்களை சார்ஜ் செய்து வருகின்றனர். மற்றபடி எந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் தினமும் இருளில் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது. கிராமங்களை சுற்றி காடுகளில் இருந்த பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் மழை வெள்ளத்தின் காரணமாக வீடுகளுக்கு படையெடுத்து வருவதால் இரவில் அச்சத்துடன் இருக்கும் நிலையும் உள்ளது. இதனால் சிறுவர்கள், வயதானவர்கள் பயத்துடன் ஒவ்வொருநாள் இரவையும் கழித்து வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் முழுவதும் குறைய 15 நாட்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது. எனவே கிராமங்களுக்கு மின் சப்ளை வழங்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்த அந்த மின்கம்பம் சரிந்து இருந்தது. இதன் பின்னர் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அடுத்து வந்த ஆண்டுகளில் பெரிய அளவில் ஆற்றில் வெள்ளம் ஏற்படாததால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் தற்போது ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மின்கம்பம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஆழ்வார் திருநகரி-ஆழ்வார் தோப்பு இடையே புதிய மேம்பாலம் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தை ஒட்டி பாதுகாப்பான முறையில் மின்கம்பம் அமைத்து மின்சப்ளை வேண்டும் அல்லது மாற்று வழியில் தற்காலிகமாக மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்த மின் கம்பம் மூழ்கி உள்ளதால் கிராமம் முழுவதும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 நாட்களாக இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் மாற்று வழி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். இன்னும் எத்தனை நாட்கள் இதே போல் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நாங்கள் தெரிவித்து உள்ளோம். ஆனால் தற்போது வரை எந்த உறுதியும் அவர்கள் கொடுக்கவில்லை. மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய அதிகாரிகளும் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மழை நின்றும் மின் இணைப்பு வழங்காததால் ஆத்திரம் அடைந்த புது வள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்தநிலையில் மழை நின்ற பின்னரும் மின்சாரம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் காக்களூர் துணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • சென்னையில் நாளை தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அண்ணாநகர் பகுதியில் எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (30-ந் தேதி) தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லப்பாக்கம் மெயின் ரோடு, செல்லி நகர், சுந்தரம் காலனி, எழில் நகர், கம்பர் தெரு, 100 அடி ரோடு, அண்ணா தெரு, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், சந்தான லட்சுமி தெரு, ஆதி லட்சுமி தெரு, விஜயலட்சுமி தெரு, அன்னை நகர் மற்றும் சவுபாக்கிய லட்சுமி தெரு, ராதாநகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர் மற்றும் கண்ணம்மாள் நகர்.

    அண்ணாநகர் பகுதியில் மதுரவாயல், கிருஷ்ணாநகர், ருக்மணி நகர், பாரதி நகர், எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை, ஈ.எச்.ரோடு, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர், எம்.பி.எம்.தெரு, சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏ.பி.சி. கல்யாணபுரம், சத்திய மூர்த்தி நகர் 1 முதல் 25-வது தெரு வரை சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3 வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ.காலனி மற்றும் சர்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பகுதியில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நாளை (22-ந்தேதி) நடை பெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேனாம்பேடு, கள்ளக்குப்பம், ஓரகடம், பானுநகர், புதூர், வெங்கடாபுரம், செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வார்டு கவுன்சிலரான ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.
    • கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது தலவூர் கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

    அதன்படி தனது வார்டுக்கு உட்பட்டவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை சில்லறை காசுகளாக மாற்றினார். மொத்தம் 9 வாடிக்கையாளர்களின் மின் கட்டணமான ரூ 7 ஆயிரத்துக்கு ரூ,1, ரூ2, ரூ5 நாணங்களாக மாற்றி ஒரு பையில் மூட்டையாக கட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வழங்கினார்.

    அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களின் மின் அட்டை மற்றும் சில்லறை காசுகள் அடங்கிய மூட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். அவற்றை வேறு வழியின்றி வாங்கிக்கொண்ட மின் ஊழியர்கள், சில்லறை காசுகள் அனைத்தையும் பல மணி நேரமாக எண்ணினர்.

    பின்பு மின் கட்டணத்துக்கான ரசீதை கவுன்சிலரிடம் கொடுத்தனர். இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியதாவது:-

    மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி எங்களை கஷ்டப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எனது வார்டில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. என்னுடைய வார்டில் தினமும் 20 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இன்று 9 வீடுகளின் மின் கட்டணத்தை சில்லறையாக கொண்டு வந்துள்ளேன். இதற்கு பிறகும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், எனது வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டண தொகையையும் நாணயங்களில் கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • கவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    மீஞ்சூரை அடுத்த மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை (27-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர், மேலூர்,வல்லூர் பட்டமந்திரி, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அரியன்வாயல், புங்கம்பேடு, கே.ஜி.எல். பிரபு நகர், சூர்யா நகர், லட்சுமி நகர்,முரளி நகர், நாலூர், கேசவபுரம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், மடியூர், ராமாபுரம், வழுதிகைமேடு, 400 அடி ரோடு , முல்லைவாயல், கே ஆர் பாளையம், பள்ளிப்புரம், மீஞ்சூர் நியூ டவுன், வள்ளுவர் நகர், அன்பழகன் நகர், கொண்டக்கரை, ஆகிய பகுதி களில் மின் வினி யோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற் பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்கா நத்தம், தோட்ட முடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜ புரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்தி ரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    காளப்பநாய்க்கன்பட்டி

    காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திரும லைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாத புரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் நடுவலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையலூர், கோரைகுளம், காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூர், சாத்தாம்பாடி, முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுப்பாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையாதியலூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை மற்றும் துணை மின்நிலையத்திற்கு அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் கிராமிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    • அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டியுள்ளது.
    • மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும், நிலத்தடி கேபிள்கள் மூலமாக தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். அம்பத்தூர் ரெயில்நிலைய பகுதியில் மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் , சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.

    அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டியுள்ளது. எனவே அம்பத்தூர் பகுதியில் ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேஷ் கூறும்போது, மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் நீண்ட நாட்களாகவே முன் வைத்து வருகிறார்கள். அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அம்பத்தூரில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 24-ந்தேதி மாதா ந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் 24-ந் தேதி வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 24-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதனால் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியான காரிமங்கலம், கெரகோட அள்ளி, பொம்மஅள்ளி, கெட்டுர், அனுமந்தபுரம், எழுமிச்சனஅள்ளி, அண்ணா மலை அள்ளி, கும்பாரஅள்ளி, சின்ன கொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, கொல்லுப்பட்டி, காட்டூர், தும்பல அள்ளி, ஏ.சப்பாணிபட்டி, கெண்டிகானஅள்ளி, பெரியாம்பட்டி, சின்ன பூலாப்பட்டி, மோட்டு கொட்டாய், பேகாரஅள்ளி, திண்டல், பந்தாரஅள்ளி, எட்டியானூர், கோவிலூர், கே. மோட்டூர், எச்சனஅள்ளி, கீரிக்கொட்டாய், மன்னன் கொட்டாய் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி களில் நாளை மறுநாள் 24-ந் தேதி வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • தருமபுரி கோட்டத் திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாரம் நிறுத்த ப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கோட்டத் திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதனால் வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், அதகப்பாடி, இண்டூர், சோம்பட்டி, சோகத்தூர், பங்குநத்தம், பேடரஅள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர் நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×