என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டு பகுதியில் 16-ந்தேதி மின் நிறுத்தம்
    X

    காலாப்பட்டு பகுதியில் 16-ந்தேதி மின் நிறுத்தம்

    • காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • மத்திய சிறைச் சாலை, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனூர் - காலாப்பட்டு மின் பாதையில் பராமரிப்பு பணிகள் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கனகசெட்டிக்குளம் சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச் சாலை, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆலங்குப்பம் மின்பாதைக்கு உட்பட்ட புதுவை மத்திய பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு. தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கருவடிக்குப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிள்ளைச் சாவடி மின்பாதைக்கு உட்பட்ட சின்னகாலாப்பட்டு. புதுநகர், மெட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    Next Story
    ×