என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 100 பேர் கைது
அரியலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் குழுவினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 2 பேரூராட் சிகள், 201 கிராம ஊராட்சிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். அரியலூர் பஸ்நிலையம், ராஜாஜி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட அரியலூர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டு சாமிநாதன், சகாயம், பிரதாப்சிங், சதீஷ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் சேர்த்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக 100 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பண்டல் பண்டலாக புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டன.

Next Story