என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலைமறியல்
    X

    ஜெயங்கொண்டம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலைமறியல்

    ஜெயங்கொண்டம் அருகில் இடையார் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. பின்னர் ஒரு கடையை உடையார்பாளையம் - இடையார் செல்லும் சாலையில் தொடக்கி வியாபாரம்செய்து வருகின்றனர். தற்போது புதிதாக மற்றொரு கடை தொடங்குவதற்காக இடம் பார்த்து ஊருக்குள் வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனை அறிந்த பொது மக்கள் ஏற்கனவே வைக்கப்பட்ட கடையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இடையார், ஏந்தல், வாணதிரையன்பட்டிணம் போன்ற கிராமங்களிலிருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்கு வந்து சேர முடியவில்லை. ஒவ்வொருநாளும் பயந்து பயந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் புதிய கடையும்திறக்க கூடாது பழைய கடையையும் அகற்ற வேண்டும் என கூறி உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கவேண்டும். இப்படி சாலைமறியலில் ஈடுபடகூடாது. உங்களது கோரிக்கைகளை நாங்களும் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்ககின்றோம் என கூறியதும் அனைத்து மக்களும் கலைந்து மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்றனர். கூட்டத்தை பார்த்ததும் பேருந்துகள் மாற்று பாதையில் சென்றனர். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×