search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 6 பஸ் நிலையங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்- சேகர்பாபு அறிவிப்பு
    X

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 6 பஸ் நிலையங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்- சேகர்பாபு அறிவிப்பு

    • சட்டமன்ற மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 36 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • அம்பத்தூர் பஸ்நிலையம் கலைஞர் 1967-ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    வடசென்னையில் உள்ள பஸ்நிலையங்களை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.

    அம்பத்தூர் பஸ் நிலையத்தை ஆய்வு செய்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 36 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் அம்பத்தூர் எஸ்டேட் பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், கவியரசு கண்ணதாசன் நகர் உள்பட 6 பேருந்து நிலையங்கள் ரூ.50 கோடி செலவில் நவீனமுறையில் மேம்படுத்தப்படும்.

    ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் அழகிய முகப்பு, பெண்கள் பாலூட்டும் அறை இருக்கைகள், டி.வி., கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, நிர்வாக அலுவலகம், கடைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதத்துக்குள் தொடங்கும். அம்பத்தூர் பஸ்நிலையம் கலைஞர் 1967-ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    Next Story
    ×