search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைவசதிக்காக முட்புதர்களை அகற்றிய மலைகிராம மக்கள்.
    X
    சாலைவசதிக்காக முட்புதர்களை அகற்றிய மலைகிராம மக்கள்.

    பெரியகுளத்தில் சாலை வசதிக்காக முட்புதர்கள் அகற்றம்

    பெரியகுளத்தில் சாலை வசதிக்காக புதர்களை அகற்றியபோது வனத்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது
    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது பெரியூர். இந்த ஊரானது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவின் வெள்ளகெவி ஊராட்சியில் உள்ளது. ஆனால் பெரியூர் மலை கிராம மக்கள் பெரியகுளம் பகுதியில் இருந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாத நிலையில் நடந்தே அங்கு விளைவிக்கும் விளைபொருட்களைக் கொண்டு வருவதும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதுமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் 1882-ம்  ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது அந்தப் பகுதிக்கு சாலை அமைப்பதற்கான ரைட் ஆப் உரிமத்தை வழங்கியுள்ளனர். அதன் பின்பு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் இதுவரையில் தமிழக அரசு சாலை அமைத்து தராத நிலையில் அவர்கள் செல்லும் பாதை முழுவதும் புதர் மண்டி இருப்பதால் மக்கள் செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் பெரியூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து அவர்கள் செல்லும் மலைப்பாதையில் உள்ள புதர்களை அகற்றி சாலையை சீரமைப்பதற்காக  100-க்கும் மேற்பட்ட மக்கள் பாதையில் இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
     
    இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் போக்குவரத்துக்கு இடை–யூறாக உள்ள புதர்களை பொதுமக்கள் அகற்றுவதை தடுத்து நிறுத்தி மலை கிராம மக்களை தேவதானப்பட்டி வனத்துறை அலுவலக–த்திற்கு அனைவரும் வரவேண்டும் என கூறியதால் அங்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் மலைகிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது சம்மந்தமாக மலை கிராம மக்கள் கூறுகையில், இதுவரையில் சாலை வசதி இல்லாததால் தமிழக அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை கூட ரூ.400 முதல் ரூ.500 செலவழித்து அதை குதிரையின் மூலம் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

    பெண்கள் பிரசவ காலத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முடியாத அவலநிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். வயதானவர் நோய்வா–ய்ப்பட்டால் அவர்களை கொண்டு செல்ல முடியாத நிலையில்  உள்ளோம். தொடர்ந்து மலை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத நிலையில் இருக்கிறோம்.

    தற்போது மகப்பேறு காலத்தில் கூட தடுப்பு ஊசி செலுத்த முடியவில்லை. இதுவரை பல்வேறு அரசு அதிகாரிகளிடம் எடுத்துகூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    எனவே தமிழக அரசு பெரியூர் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×