search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட டாரஸ் லாரிகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட டாரஸ் லாரிகள்.

    மார்த்தாண்டத்தில் 20 டாரஸ் லாரிகள் பறிமுதல்

    மார்த்தாண்டத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற 20 டாரஸ் லாரிகள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட எல்லை சோதனைச் சாவடி வழியாக பெரிய கனரக டாரஸ் லாரி களில் கற்கள், பாறைதூள், எம்சான்ட் ஆகிய கனிம வள பொருள்கள் நிர்ணயிக்க ப்பட்ட அளவை விட அதிக அளவில் ஏற்றிச் செல்லப்படுவது வழக்கமாக 
    உள்ளது. கனரக லாரிகளில் 28 டன்கள் வரை பாரம் ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு.   ஆனால் அதனுடைய பாடி அளவை உயர்த்தி 55 டன் வரை பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறது.  

    இதனால் அதிவேகமாகச் செல்லும் அந்த லாரிகளால் சாலைகள் சேதம் ஏற்படுவதோடு, வாகனங்கள் நெருக்கடியாக செல்லும் பகுதிகளில், கட்டுப்பாடுகளை இழந்து ஏராளமான விபத்துக்களும்  ஏற்பட்டு பலர் பலியாகி உள்ளனர். தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பின்னர் சாரை சாரையாக பகல் வேளைகளில் சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரிகள் இரவு வேளைகளில் செல்ல தொடங்கியது. 

    இதனால் அதிகாலை நேரங்களில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு தொடர் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து பொது மக்களும் சமூக ஆர்வல ர்களும் மீண்டும் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் இந்த கனிம வள கடத்தல் லாரி களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் நடவடிக்கை களை மேற்கொண்டு ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    ஆனால் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இரவு மற்றும் பகலில் ஒரே நேரத்தில் அதிக லாரிகள் குமரி - கேரளா எல்லையில் உள்ள ஏதேனும் ஒரு சோதனைச் சாவடி வழியாக கடந்து சென்றுவிடுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு  விவேகானந்தன் சுக்லா, துணை சூப்பிரண்டு   கணேசன்,  மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். 

    அப்போது கேரளாவிற்கு அதிக பாரம் ஏற்றி சென்ற 20 லாரிகளை பறிமுதல் செய்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் 13 டாரஸ் கனரக லாரிகளில் போதிய ஆவணங்கள் இல்லாமல் அதிக பாரம் ஏற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

    ஆவணங்கள் சரியாக இருந்த 7-டாரஸ் கனரக லாரிகளை விடுவித்தனர்.தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் கனரக டாரஸ் லாரிகளை தடை செய்வதுடன் சாதாரண லாரிகளுக்கு அனுமதி கொடுத்து முறையாக அரசு அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் இருந்து கனிம வளங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×