என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருட்டு
  X
  திருட்டு

  வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது.
  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  உள்ள  வேடர்புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து அலெக்சாண்டர்(40). இவர் கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

  கடந்த 30-ந்தேதி காலை இவர்  குடும்பத்துடன் திண்டுக்கல் செந்தூரை கிராமத்திற்கு திருவிழாவுக்கு சென்று விட்டார். அப்போது தங்களுக்கு தேவையான நகைகளை மட்டும் எடுத்துச் சென்றுவிட்டார்.

  குழந்தைகள் அணியும் நகைகளை  பீரோவில் வைத்துவிட்டு சென்று–விட்டார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு   பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பீரோவில் இருந்த 4.5 பவுன் தங்க நகை, ரூ. 15 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

  இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் முத்து அலெக்ஸாண்டர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×