search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரசு பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கு வரவேற்பு

    1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை திருச்சி ஆசிரியர்கள், பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
    திருச்சி:

    தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் தரப்பில் அதிகமான வரவேற்பு எழுந்துள்ளது.

    அதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:

    அரசு தொடக்க பள்ளிகளில் படிக்க கூடிய குழந்தைகள் காலையில் காபி உள்ளிட்டவைகளை மட்டுமே குடித்து விட்டு பள்ளிக்கு வருகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த அவர்களின் பெற்றோர்களும் காலை 7 மணிக்கு கூலி வேலைகளுக்கு செல்லும் நிலையும் உள்ளது. இதனால் குழந்தைகள் பசியால் படிக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

    அதை போக்குகின்ற வகையில் தற்போது தமிழக முதல்வர் காலையில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலமாக உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு கூட பள்ளிக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நிலை உருவாகி, அனைவரும் கல்வியை கற்பதற்கு ஒரு வாய்ப்பாக உருவாகும்.

    மேலும் சிற்றுண்டியை குழந்தைகள் சாப்பிடுவதால் ஆரோக்கியமாக காலையில் பள்ளியில் படிக்கும் நிலை உருவாகும். மேலும் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அரசு பள்ளியில் தங்களது குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் கூறுகையில், காலையில் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் நாங்கள் கூலி வேலைக்குச் சென்று விடுகிறோம். இதனால் குழந்தை சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு செல்கிறது.

    ஆகவே இந்த சிற்றுண்டி திட்டம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அது குழந்தைகளுக்கும் பசியை போக்குகின்ற திட்டமாக இருக்கும். இதனால் எங்கள் குழந்தைகள் பசியின்றி படிக்கும் நிலை உருவாகும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×