search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

    கொள்ளையடித்த நகைகளுடன் நேபாளம் சென்று ‘செட்டில்’ ஆக திட்டமிட்டேன்- கைதான டிரைவர் வாக்குமூலம்

    நகைகளை விற்று பணமாக்கி வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நேபாளத்துக்கு காரிலேயே செல்ல திட்டமிட்டதாக கைதான கார் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை:

    கணவன்-மனைவி இருவரையும் கொலை செய்தது ஏன்? என்பது பற்றி கார் டிரைவர் கிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நேபாளத்தைச் சேர்ந்த நான் கடந்த 15 ஆண்டுகளாக தொழில் அதிபர் ஸ்ரீகாந்தின் வீட்டில் வேலை செய்து வருகிறேன்.

    ஸ்ரீகாந்த்துக்கும், அவரது மனைவி அனுராதாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் நானே செய்து வந்தேன். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் என்னை முழுமையாக நம்பினார்கள்.

    கடந்த மார்ச் மாதம் இருவரும் அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டையும், மயிலாப்பூரில் உள்ள பங்களா வீட்டையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு சென்றனர். 2 வீடுகளையும் நானே பார்த்துக் கொண்டேன்.

    ஸ்ரீகாந்த் வசதியானவர். வீட்டில் கிலோ கணக்கில் நகைகளை வாங்கி வைத்திருந்தார். இது எனது கண்ணை உறுத்தியது.

    அந்த நகைகளை கொள்ளையடிக்க எனது நண்பர் ரவியுடன் சேர்ந்து திட்டம் போட்டேன். கடந்த 3 மாதமாக இதற்காக திட்டம் தீட்டினோம். அமெரிக்காவில் இருந்து ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் எப்போது சென்னை திரும்புவார்கள்? போட்டுத் தள்ளலாம் என காத்திருந்தோம்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இருவரையும் நான் காரில் அழைத்துச் சென்றேன். மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு சென்றதும் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் தங்களது டிராவல் பேக்குகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றதும் இருவரையும் அடித்துக் கொலை செய்தோம். பின்னர் காரில் ஏற்றி பண்ணை வீட்டுக்குக் கொண்டு சென்று உடல்களை புதைத்தோம்.

    அமெரிக்காவில் இருந்து இருவரும் திரும்பாதது போலவே காட்சி அமைப்பை உருவாக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அமெரிக்காவில் இருந்த மகள் போன் செய்து விசாரித்ததால் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. நகைகளை விற்று பணமாக்கி வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நேபாளத்துக்கு காரிலேயே செல்ல நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஆந்திராவில் போலீசில் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு கிருஷ்ணா வாக்குமூலம் அளித்து உள்ளார்.

    Next Story
    ×