search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா

    கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா இன்று காலை தொடங்கியது
    கன்னியாகுமரி:

    கொட்டாரம் ராமநாதபுரத்தில் ஸ்ரீதேவி முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. 
    இந்த கோவிலில் சித்திரை கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. 

    இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும் மாலை 6-30 மணிக்கு தீபாராதனையும் இரவு 7 மணிக்கு கற்பகவிநாயகர் நூல்நிலையம் வாசகர் வட்டம் சார்பில் மகாகவி பாரதியின் பாடல்களில் பெரிதும் பேண வேண்டி யது சமயநெறியா? சமூக எழுச்சியா? மொழி உணர்வா?என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடக்கிறது. 

    நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும் 5 மணிக்கு கணபதி ஹோமமும் 6-30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்குகொலு மேளமும் மாலை 6.30 மணிக்கு திரு விளக்கு பூஜையும் நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு நையாண்டி மேளமும் 9-30 மணிக்கு குடிய ழைப்பும் நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும்காலை7 மணிக்கு வில்லிசையும் 8 மணிக்கு மேளதா ளபரிவா ரங்களோடு யானை மீது அமர்ந்து கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து சந்தன குடம் ஊர்வலமாக எடுத்து வர அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது 11மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும்1 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு செண்டை மேளமும் 4.30 மணிக்கு தப்பு மேளம் 5 மணிக்கு வில்லி சையும் 5.15 மணிக்கு நையாண்டி மேளமும் நடக்கிறது. 5.30 மணிக்கு தாரை தப்பட்டை செண்டை மேளம் முழங்க மேளதாளத்துடன் ருத்ரபூமி படுக்கைக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு வில்லிசையும் 8.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மங்களஇசையும் காலை 6.30 மணிக்கு பொங்கல் வழிபாடும் 8 மணிக்கு வில்லிசையும் 10 மணிக்கு நையாண்டி மேளமும் 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 11.30மணிக்கு அம்மன் நீராடச் செல்லும் பகல் 12 மணிக்கு பூப்படைப்பும் அதைத் தொடர்ந்து தீபாராத னையும் 1 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது.

    பிற்பகல் 2 மணிக்கு அம்மன் வீதியுலா வருதலும் மாலை 4-30 மணிக்கு அம்மன் வேதாள வாகனத்தில் பவனி வருதலும் 6.30 மணிக்கு வாழிபாடுதலும் இரவு 8 மணிக்கு தீபாராதனையும் 8.15 மணிக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான அறங்காவலர் குழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×