search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்திலி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
    X
    கந்திலி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்- 19 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலெக்டரை சந்தித்து மனு

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என 19 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்கள் மேம்பாட்டு சங்க தலைவர் ஜி. வில்வநாதன், செயலாளர் டி. ஜி.முருகன், பொருளாளர் எஸ்.ராமு, துணைத்தலைவர் ஆ. மணிமேகலை, துணைச்செயலாளர் மு.மேகலை, தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது:-

    ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகிய எங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி அனைத்து திட்டப் பணிகளையும் தலைவர்கள் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும், 

    ஊரக வளர்ச்சி முகமை மூலம் விடுவதால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வரம்பில் உள்ளவர்கள் எங்கள் உரிமையை பறித்து வேலைகளை தரமில்லாமல் செய்யும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்தந்த ஊராட்சி ஒதுக்கியுள்ள பணிகள் டெண்டர்கள், 

    பணி ஒப்பந்தங்கள் அனைத்தும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்க வேண்டும், அனைத்து பணிகள் முடிய பதில்களும் ஊராட்சி மன்றத்தில் வைக்க வேண்டும், ஊராட்சியில் நடைபெற்ற பணிகளுக்கு தலைவர்களிடம் கையொப்பமிட்ட பின் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பகுதி வேலை முடிந்த வீடுகளுக்கு பில்அனுமதி அளிக்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆட்களை காலை 7 மணிக்கு அழைத்து வருவதை 9 மணி ஆக உயர்த்த வேண்டும், 

    100 நாள் வேலை யாட்களை விவசாயத்திற்கு பொது இடங்களை சுத்தம் செய்யவும், குறுங்காடுகள் மற்றும் பொது இடங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டும் நூறு நாள் வேலைத் திட்டங்களில் பணிகளை கணக்கெடுக்க ஊராட்சி தலைவருக்கு செல்போன் வழங்க வேண்டும், 

    அனைத்து ஊராட்சிகளுக்கும் இன்டர்நெட் வழங்க வேண்டும், என்று மக்கள் நலப் பணியாளர்கள் தலைவர்களின் ஒப்புதலுடன் பணியமர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

    இதற்கு கலெக்டர் கூறுகையில்:-

    100 நாள் வேலைத்திட்டத்திற்கு காலை 7 மணிக்கு பதில் 8 மணிக்கு வர அனுமதிக்க உத்தரவிடுகிறேன், செல்போன் வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும், 

    ஊராட்சி மன்ற தலைவர்கள் தாங்கள் தூய்மை படுத்தும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும், வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகள் விரைவில் கட்டி முடிக்க அனைவரும் பாடுபட வேண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தை முதன்மையாக மற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினர். 

    உடன் திட்ட இயக்குனர் செல்வராசு, கந்திலி ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×