search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ரூ.250 கோடி வருவாய் ஈட்டி ரெயில்வே கோட்டம் சாதனை

    ரூ.250 கோடி வருவாய் ஈட்டி ரெயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் கடந்த 2021 ஏப்ரல் முதல் மார்ச் 2022 வரையிலான கால கட்டத்தில் பயணிகள் வருகை முன்பை விட உயர்ந்துள்ளது. மேற்கண்ட காலகட்டத்தில் 12.11 மில்லியன் பயணிகள் பல்வேறு ரெயில்நிலையங்கள் மூலம் ரெயில்களில் பயணம் செய்த வகையில் ரெயில்வேக்கு ரூ. 250.09 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

    கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த ஏப்ரல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் 3.13 மில்லியன் பயணிகள் மட்டுமே ரெயில்நிலையங்களுக்கு வந்தனர். அதனால் வருவாய் ரூ. 75.07 கோடி அளவுக்கு சரிந்தது. இப்போது பயணிகள் வருகை அதிகரித்ததால் வருவாயும் மும்மடங்கு உயர்ந்துள்ளது.  

    இதுபற்ற ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, நிகழாண்டில் சரக்கு போக்குவரத்து வருவாயில் மாற்றம் நிகழவில்லை. 2020-21-ல் சரக்குபோக்குவரத்து மூலம் திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு ரூ. 460.22 கோடி கிடைத்தது. 2021-22-ல் நிலக்கரி, சிமெண்ட், உணவு தானிங்கள், உரம், இரும்பு மற்றும் இதர பொருட்கள் மூலம் ரூ. 460.42 கோடி வருவாய் வந்துள்ளது.

    திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 150 ரெயில்நிலையங்கள் வருகின்றன. இதில் 7 ரெயில்நிலையங்களில் பயணிகளின் வரத்து அதிக அளவில் உள்ளன. அடுத்து வரும் மாதங்களில் வருவாய் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பில் உறுதியாக இருக்கிறோம். இன்னும் அதிக வசதிகளை ரெயில் பயணிகளுக்கு ஏற்படுத்தி தர முயற்சிக்கிறோம் என்றார். 
    Next Story
    ×