search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலமலை  ரங்கநாதர் கோவில்
    X
    பாலமலை ரங்கநாதர் கோவில்

    பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

    பாலமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தேரோட்டம் நடக்கும்.
    கவுண்டம்பாளையம்:

     கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருத்தல-மான பாலமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தேரோட்டம் நடக்கும். இதனையொட்டி 10 நாட்கள் இங்கு உற்வசம் நடக்கும். இங்குள்ள 7&க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆராதிக்கும் அரங்கனின் இந்த வைபவத்தை முன்னிட்டு   கொடியேற்றம் நடைபெற்றது. 

    இதற்கு பரம்பரை அறங்காவலர்  ஜெகதீசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து சுவாமி  நேற்று  அன்ன-வாகனத்திலும், இன்று அனுமந்த வாகனத்-திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்-பாலித்தார். நாளை கருட/வாகனத்தில் எழுந்தரு-ளுகிறார். வருகிற 15&ந் தேதி நடக்கும் திருக்கல் யாண உற்சவத்தில் செங்கே £தை, பூங்கோதை தாயார் களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் வருகிற 16-ந்  தேதி சனிக்கிழமையன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாலை 4 மணிஅளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாடவீதிகளில் வலம் வருகிறார். 

    17-ந் தேதி நடக்கும் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் நடக்கின்றன. 18 மற்றும் 19&ந்  தேதிகளில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கின்றன. விழாவில் தினமும் அன்னதானமும், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனைகளும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்துள்ளார். 
    Next Story
    ×