search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3-வது நாளாக நடந்த சிவாலாய ஓட்டம்
    X
    3-வது நாளாக நடந்த சிவாலாய ஓட்டம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக நடந்த சிவாலாய ஓட்டம் - ஆயிரக்கணக்கானேர் பங்கேற்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக நடந்த சிவாலாய ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானேர் பங்கேற்றனர்.
    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி உடை அணிந்து, கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங் கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக நடந்தும், ஓடியும், வாகனங்களிலும் சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.

    இங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ.  6 ஆயிரம் ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது என கூறப்படுகிறது. 
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த 12 சிவாலயங்களில் மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொண்டனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் செல்லும் வழி நெடுக பொதுமக்கள் சார்பிலும் குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
     இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அடங்கிய இந்த சிவராத்திரி தினத்தில்  இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     பல இடங்களில் வாகன நெருக்கடியால்  பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.  பல பகுதிகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது. பத்மநாபபுரம் கல்குளம் சிவாலயத்தில் இருந்து மேலாங்கோடு செல்லும் பாதை குண்டும் குழியுமாக கரடுமுரடாக காணப்பட்டதால் நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். 

    பக்தர்கள் இன்று விடிய விடிய நடந்த சிவாலய ஓட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த ஓட்டம் இன்று மாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    தற்போதும் ஆண்-பெண் என பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.மூன்றாவது நாளாக இன்று இந்த புனித யாத்திரை நடக்கிறது. இன்றும் வாகனங்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    Next Story
    ×