search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மகா சிவராத்திரி ஹோமம்
    X
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மகா சிவராத்திரி ஹோமம்

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் 100 சாயி பக்தர்கள் நடத்திய மகா சிவராத்திரி ஹோமம்

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் 100 சாயி பக்தர்கள் நடத்திய மகா சிவராத்திரி ஹோமம் - விசேஷ பூஜைகளுடன் விடிய-விடிய நடந்தது
    கன்னியாகுமரி: 

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைந்து உள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் சாய் ஆனந்த அமிர்தம் பவுண்டேஷன் சார்பில் மகா சிவராத்திரி விழா நேற்று விடிய-விடிய நடந்தது. 

    இதையொட்டி அதிகாலை 5-30 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நாதஸ்வர இசை, ருத்ராபிஷேகம் போன்றவை நடந்தது. இதில்100-க்கும் மேற்பட்ட சாயி பக்தர்கள் கலந்து கொண்ட நடன சங்கீர்த்தனமும் நடைபெற்றது.
     
    பின்னர் காலை 8-30 மணிக்கு பஜனை நடந்தது. அதன் பிறகு 9.30 மணிக்கு மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள வந்த ஆந்திராவை சேர்ந்த சத்திய சாய் பாபாவின் சிஷ்யரான பகவானுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பும் உபசாரமும் நடந்தது. பின்னர் பஞ்சபூத மகாலிங்கேஸ்வரர் ஹோமம் நடந்தது. 
    இதில் கணபதி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், பஞ்சபூத காயத்ரி ஹோமம், சம்பூர்ண சர்வகடாட்ச நிவாரண ஹோமம், காளி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருதஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம், மேதாசுத்திஹோமம், மகா பூர்ணாஹூதி வதோதரா போன்றவை நடைபெற்றது. 

    அதன் பிறகு பகவான் சாயி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் மங்கள ஆரத்தியும் பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்குதலும் நடந்தது. அதன் பின்னர் மாலை 3 மணிக்கு கலச பூஜை மற்றும் சாயி பஜனை போன்றவை நடந்தது. அதனைத்  தொடர்ந்து 3.45 மணிக்கு பகவான் சாயிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பும் உபசாரமும் நடந்தது. 

    4 மணிக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணைத் தலைவர்  அனுமந்தராவ், குருபிரசாத்  தியானக்குழு டிரஸ்ட் நிர்வாகி அவதோதா ஆகியோர் முன்னிலையில் சாயி ஆனந்த யோகம் ருத்ர ஜோதி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. 

    பின்னர் கேரளா மலப்புரம் சாய் சைதன்யா தரா பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் கவுதமன்,  திருவனந்தபுரம் சத்திய சாயி சேவா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே. எஸ். நாயர் ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள். 
    மாலை 6-30 மணிக்கு ஸ்ரீசாயி ஆனந்தலிங்க ஏகாம்பரேஸ்வர சோடஷா உபசார பூஜையும் இரவு 8 மணிக்கு நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடந்தது. 

    பின்னர் 8.30 மணிக்கு ருத்ர தத்துவம் பற்றி அஜித் கிரி பாலு பேசினார். அதனைத் தொடர்ந்து பஞ்ச பூதேஸ்வரா தியானம், ஜலசங்கல்பம், போன்றவை நடந்தது. 9-30 மணிக்கு ஸ்ரீசாயி ஆனந்த லிங்கா ஜம்புகேஸ்வரா ஷோடச உபசார பூஜையும் நடந்தது. அதைத்தொடர்ந்து நடன மும் ஆத்மபோற்றி நிகழ்ச்சியும் நடந்தது.

    11.50 மணிக்கு ஜலத்தினால் பஞ்ச பூதேஸ்வரா தியான மும் நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்ரீசாயி ஆனந்தலிங்கா அருணாச்சலேஸ்வரா ஷோடச உபசார பூஜையும் 2 மணிக்கு நடன நிகழ்ச்சியும் 2.30 மணிக்கு பொது பஜனையும் 3 மணிக்கு அக்னி மூலம் பஞ்சபூதேஸ்வரா தியானமும் வாயு சங்கல்பமும் நடந்தது. 

    அதன் பின்னர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீசாயி ஆனந்த லிங்கா காளகஸ்தீஸ்வரா ஷோடச உபசார பூஜையும் 6  மணிக்கு வாயு மூலம் பஞ்சபூதேஸ்வரா தியானமும் இன்று காலை 6.0 மணிக்கு ஸ்ரீசாயி ஆனந்த லிங்கா சிதம்பரேஸ்வரா ஆகாஷா தியானமும் 8 மணிக்கு பஞ்ச பூதலிங்கேஸ்வரா ஆகாச தியானமும் 8.30 மணிக்கு சாய் பஜனையும் அதனைத் தொடர்ந்து மங்கள ஆரத்தியும் நடந்தது.
    Next Story
    ×