search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை மாநகராட்சியில் வாக்குப்பதிவு குறைந்தது யாருக்கு சாதகம்

    கோவை மாநகராட்சியில் 53.61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
    கோவை 

    கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டு களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பிரசார களம் சூடுபிடித்து காணப்பட்டது.

    மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் எங்கு பார்த் தாலும் கட்சி கொடிகளை கையில் ஏந்தி கொண்டு கூட்டம், கூட்டமாக போடுங்கம்மா ஓட்டு. எங்கள் சின்னத்தை பார்த்து. மக்கள் பணியாற்றுவதற்காக உங்களை தேடி வந்துள்ளேன் என்ற கோஷங்களே அதிகளவில் காணப்பட்டது.  இதனால் மாநகரில் தெருக் கள் முழுவதும் பிரசார மய மாக களைகட்டி இருந்தது. 

    இதுதவிர தி.மு.க., அ.தி.முக. பா.ஜ.க,  மக்கள் நீதிமய்யம், நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

    தேர்தல் பிரசாரம் ஒருபுறமும் வேகமாக நடந்தாலும், மறுபுறம் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக ஒவ்வொரு கட்சியினரும், பணம், வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ்கள் என பல்வேறு வகையான பரிசு பொருட்களையும் வீடு, வீடாக சென்று வாக்காளர் களுக்கு கொடுத்தனர். 

    இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் அரசியல் கட்சியினருக்கு  போட்டியாக பரிசு பொருட்களை அள்ளி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தது.

    பரிசு பொருட்கள் கொடுத் தாகவும், மண்டபங்களில் பரிசு பொருட்களை அடுக்கி வைத்திருப்பதாகவும் அரசியல் கட்சியினர் மாறி, மாறி புகார்கள் அளித்து கொண்ட சம்பவமும் நடந்தது. இதுபோக தேர்தல் நாளான நேற்றும் கூட பல இடங்களில் போராட்டமும், சில இடத்தில் மோதல்களும் நடந்தை காண முடிந்தது.

    இப்படி பல்வேறு போராட்டங்கள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது, தேர்தல் நாளில் மோதிக் கொண்டது என பல பிரச்சினைகளை கடந்து சுமூகமாக முடிந்த கோவை மாநகராட்சி தேர்தலில் 53.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இந்த வாக்கு சதவீதம் கடந்த 2011&ம் ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட மிக குறைவாகும். 2011&ம் ஆண்டு நடந்த தேர்தலில் 59.57 சதவீதம் பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது 53.61 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளது.

    கோவை மாநகராட்சியை கைப்பற்ற முக்கிய கட்சியான தி.மு.க., அ.தி.மு.க.வும் முட்டி மோதி வரும் நிலையில் மிக குறைவான வாக்குகளே பதிவாகி உள்ளது. மக்களிடம் வாக்களிக்க போதிய ஆர்வம் இல்லாததையே இந்த வாக்குப்பதிவு காட்டுகிறது.

    மிக குறைவான வாக்கு பதிவாகி உள்ளதால் எந்த கட்சிக்கு இது சாதகமாக அமையும், பாதகமாக மாறும் என்பதையும், கோவை மாநகராட்சியை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதே  பெரும் எதிர்பார்ப் பாக உள்ளது.  

    Next Story
    ×