search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவை படத்தில் காணலாம்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவை படத்தில் காணலாம்

    இரணியல் அருகே சாலையில் இறைச்சி கழிவுகளை வீசி சென்ற நபர்களை விரட்டி பிடித்த வாலிபர்கள்

    இரணியல் அருகே சாலையில் இறைச்சி கழிவுகளை வீசிய 3 பேரை, வாலிபர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    நாகர்கோவில்:

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரெயில் நிலையம் ஆலங்கோடு பரம்பை ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில்  மாட்டு இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி சென்றனர்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் சுகாதார துறையினருக்கும் புகார் அளித்தும் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்தது.
    இது குறித்து பரம்பை ஊர் இளைஞர்கள் அதே பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ  வீரர் விஜயகுமார் என்பவரிடம் கூறினர். 

    அவர் அப்பகுதி இளைஞர்கள் நான்கு பேர் ஒன்று சேர்த்து 5 இடங்களில் சனிக்கிழமை இரவு முழுவதும்  கண்காணிக்கும் படி கூறினார். மேலும் அவரும் ஒரு அணியில் சேர்ந்து கொண்டார்.

    இந்த நிலையில் அழகிய மண்டபத்தில் இருந்து திங்கள் நகர் நோக்கி வந்த மினி டெம்போ பரப்பை பகுதிகளில் நிறுத்தி இறைச்சி கழிவுகளை ரோட்டோரத்தில் வீசினர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த இளைஞர்கள் இது குறித்து மற்ற பகுதிகளில் இருந்த இளைஞர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு மினி டெம்போ வை மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்தனர்.

    இது தெரியாமல் இரணியல் ரெயில் நிலையம் அருகில் மினி டெம்போ வை நிறுத்தி இறைச்சி கழிவு களை ரோட்டோரத்தில் வீசினர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த  20 இளைஞர்கள் மினி டெம்போவை சுற்றி வளைத்து அதில் இருந்த 3 பேரை பிடித்தனர். 

    இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது:-.

    சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி அவர்களை  போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் விசா ரணை நடத்தினார். இதில் அவர்கள் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர்கள் என்பது தெரிவந்தது.

    அவர்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×