search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டபோது எடுத்தபடம்.
    X
    அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

    சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட கோரிக்கை

    வரலாற்றில் இடம் பெறத்தவறிய தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட வேண்டும் என அஞ்சல் தலை சேகரிப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    திருச்சி:

    வரலாற்றில் இடம் பெறத்தவறிய தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட வேண்டும் என திருச்சி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார்  திருச்சி முதுநிலை அஞ்சல் அதிகாரி அப்துல்லத்தீப், துணை அஞ்சல் அதிகாரி செந்தில்குமார் முன்னிலையில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதனிடம் அஞ் சல் தலை சேகரிப்பாளர்களுடன் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப் பதாவது:
    இந்தியாவின் 75-வதுசுதந்திர தினத்தையொட்டி ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்    கொண்டாட்டம் ஓராண்டு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் சுதந்திர போராட்டத்துக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

    அவர்களது சுதந்திர போராட்டத்தின் தியாகம், சிந்தனைகள், சாதனைகள், செயல்திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஆகிய அம்சங்களை அனைவரும் அறியும் விதமாக இந்திய அரசு  ஆசாதி  கா  அம்ரித் மஹோத்சவ், கலாச்சார அமைச்சகம்,  நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களால் வரலாற்றில் இடம் பெறத்தவறிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு வருகிறது.

    அவ்வகையில் வரலாற்றில் இடம் பெறத்தவறிய சுதந்திரப் போராட்ட தமிழக வீரர்களான திருவையாறு சுப்பிரமணிய ஐயர், திருநெல்வேலி வ.உ.சிதம்பரம்பிள்ளை, வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியார், டி.எம்.மூக்கன் ஆசாரி, சக்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு, சேலம் விஜயராகவாச்சாரியார்,

    காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, லட்சுமி நரசு செட்டியார்,  வ.வே.சு.ஐயர், ஆச்சார்யா,  சேலம் ராமசாமி முதலியார், ஜி.ஏ.நடேசன், பண்டிதை அசலாம்பிகை அம்மையார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வீரவாஞ்சி,

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திரு.வி.கல்யாணசுந்தரனார், சிங்காரவேலர், நரசிம்மலு நாயுடு, தீர்த்தகிரி முதலியார், அர்த்தநாரீச வர்மா, அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர், ராஜகோபாலாச்சாரியார், தீரர் சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், அரங்கசாமி ராஜா உட்பட பலர் உள்ளனர்.


    மேற்கண்ட பட்டியலில் வரலாற்றில் இடம் பெறத்தவறிய தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்  நிகழ்வாக வெளிவரக் கூடிய  சிறப்பு அஞ்சல் உறை வரிசையில் வரலாற்றில் இடம் பெற தவ றிய தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை இடம் பெறசெய்ய வேண்டும்.

    மேலும் சுதந்திர போராட்ட தமிழக வீரர்கள் வாழ்க்கை வரலாறு கட்டுரையையும் வழங்கி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    Next Story
    ×