search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அரவிந்த் தகவல்

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2014-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற் பிரிவின் சான்றிதழ்களில் (என்.டி.சி.) உள்ள திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.

    அதாவது பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற தொழிற்பிரிவில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்ய கிரவன்ஸ் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும்.

    2014-ம் ஆண்டிற்கு முன்பு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் திருத்தம் செய்வதற்கான தகவல்கள் டி.ஜி.டி. புதுடெல்லி போர்ட்டலில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சான்றிதழ்கள் தட்டச்சு மூலமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் அதில் உள்ள சிறு தவறுகளை மாநில இயக்குனர் அளவில் உரிய ஆவணங்களை சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதை தவிர்த்து சில பெரிய தவறுகள் எனில் அவை அனைத்தையும் தொகுத்து, சான்றிதழ்கள் தயாரிப்பு செய்வதற்கு முழு விவரங்களை எக்செல் ஷீட்டில் பூர்த்தி செய்து, மாநில இயக்குனரின் பரிந்துரை கடிதத்துடன் டி.ஜி.டி., டி.டி. செல்-க்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே அசல் தேசிய தொழிற் சான்றிதழில் திருத்தம் கோரும் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் (10-ம் வகுப்பு, பிளஸ்-2-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) ஆதார் கார்டு, அண்மையில் எடுத்த புகைப்படம் ஆகிய வற்றுடன் 28-ந் தேதிக்குள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×