search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அரவிந்த்
    X
    கலெக்டர் அரவிந்த்

    வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் : கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கலெக்டர் அரவிந்த் குடும்பத் தோடு வந்து வாக்களித்தார்.
    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    1236 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் நடந்து வருகிறது. இதில் 173 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகும். அந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

    பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

    கடந்த சட்டசபைத் தேர்தலின்போது 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதைவிட கூடுதலாக வாக்குகளைப் பதிவு செய்ய வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

    குருசடி புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் எஸ்.எல்.பி. பெண்கள் பள்ளியில் ஓட்டு போட்டார். திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் டதி பள்ளியில் வாக்களித்தார்.
    Next Story
    ×