search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்கு சேகரிக்க சென்ற ஜெ.கே.மணிகண்டனை பெண்கள் மலர்தூவி வரவேற்றனர்.
    X
    வாக்கு சேகரிக்க சென்ற ஜெ.கே.மணிகண்டனை பெண்கள் மலர்தூவி வரவேற்றனர்.

    186-வது வார்டில் ஜெ.கே. மணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு

    சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஜெ.கே. மணிகண்டன் ஷீலா நகர், சதாசிவ நகர் பகுதிகளில் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஜெ.கே. மணிகண்டன் ஷீலா நகர், சதாசிவ நகர் பகுதிகளில் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வாக்கு கேட்டு சென்ற அவரை பொது மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். பல வீடுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து கூறினார்கள்

    அப்போது பொதுமக்கள் மணிகண்டனிடம், ‘இந்த வார்டின் வளர்ச்சிக்காக நீங்கள் ஏற்கனவே செய்த பணிகளை அறிவோம். இனி வரும் காலத்தில் இந்த வார்டின் வளர்ச்சிக்கு உங்கள் சேவை அவசியம்.

    உங்கள் வெற்றியே எங்கள் வெற்றி. வாக்களிப்போம் உதயசூரியனுக்கு’ என்று உற்சாகமாக வாழ்த்து கூறினார்கள். அவர்களுக்கு மணிகண்டன் ‘உங்கள் நம்பிக்கைக்கு நன்றி’ என்றார்.
    Next Story
    ×