search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்
    X
    ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
    தருமபுரி:

    தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகம் பரவியதால் பொது மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருந்தது.

    அதனையடுத்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததோடு சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே நுழையாதவாறு காவல் துறையினர் தடுப்பு அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

    பின்னர் கொரோனா நோய் தொற்று படிபடியாக குறைய தொடங்கியது. இதானல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் சவாரி செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று தமிழகத்தில் படிபடியாக குறைந்து வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரியில் 100 சதவீதம் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மேலும் பேருந்துகளிலும் அனைவரும் பயணம் செய்யவும், உணவு விடுதி, சினிமா தியேட்டர் உள்ளிட்டவைகளுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.

    அதனடிப்படையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிக்கவும், ஆயில் மசாஜ் செய்யவும், தொங்கு பாலத்தில் சென்று கண்டு கழிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. 

    ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உற்சாக மடைந்துள்ளனர்.
    Next Story
    ×