search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை வேட்பு மனுதாக்கல்

    உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை வேட்பு மனுதாக்கல் நடக்கிறது.
    கன்னியாகுமரி:

    தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 
    இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை 28-ந் தேதி தொடங்குகிறது. 

    குமரி மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் நாகர்கோவில் மாநகராட்சி குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் 4 நகராட்சி, 51 பேரூராட்சிகளில் தலைவர் பதவி ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.,- அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 52 வார்டுகளில்  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள திமுக அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். 

    சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களமிறங்கவுள்ளனர். மாநகராட்சி வார்டு உறுப் பினர் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவல கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 

    குளச்சல், குழித்துறை, பத்ம நாபபுரம், கொல்லங் கோடு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர் கள் அந்தந்த அலுவல கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

    51 பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்குப் போட்டி யிடுபவர்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். 

    குமரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் 56 இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

    வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே வரவேண்டும். பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, வருகிற 4-ந் தேதி கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக் கள் 5-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 7-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
    Next Story
    ×