search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் காய்ச்சல், இருமலுக்கு மருந்து வாங்குபவர்களின் விவரங்கள் சேகரிப்பு

    மருந்து கடைகளில் காய்ச்சல், இருமலுக்கு மருந்து வாங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
    கோவை:

    கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி யுள்ளது. அதேநேரம் சளி, காய்ச்சல் பாதிப்புக்காக ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளுக்கு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றையும் சிலர் சாதாரண வைரஸ் காய்ச்சல் என எண்ணுகின்றனர். அதற்கு பாரசிட்டமால் போன்ற மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

    இதனால் சிலருக்கு நுரையீரல் பாதிப்பு தாமதமாக அடையாளம் காணப்பட்டு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. எனவே அறிகுறிகளை புறக்கணிக்காமல், உடனடியாக டாக்டரை அணுகி அவர்களின் பரிந்துரையின்பேரில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவதுறையினர் அறிவுறுத்துகின்றனர். 

    மேலும்  கொரோனா தொற்று பரவலை  கருத்தில்கொண்டும் சுயமாக மருந்து உட்கொள்வதை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் சளி, இருமலுக்கான மருந்துகளை டாக்டரின் பரிந்துரையின்றி விற்கக் கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது. இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு துறையினர் கூறியதாவது:-

    கோவையில் மட்டும் சுமார் 1,500 மருந்த கங்கள் உள்ளன. இங்கு பாரசிட்டமால், ஐவர்மெக்டின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளை விற்பனை செய்யும்போதும் கண்டிப்பாக டாக்டர்களின் பரிந்துரை சீட்டை பெற்றுக் கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 

    உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை சரியாக பராமரிக்க வேண்டும். டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை விற்பனை செய்தால் நோயாளியின் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் டாக்டரின் தகவல்களை மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தினசரி தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு வருகின்றது.

    வீட்டில்  தனிமைப் படுத்தப் பட்டுள்ள கொரோனா நோயாளி களுக்கு செல் போன் எஸ்.எம்.எஸ் மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங் களைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்கலாம். எந்த காரணம் கொண்டும் மருந்துகளை பரிந்துரை சீட்டு  இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×