search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி- 11 வீரர்களுக்கு கொரோனா

    நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, 11 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவுகிறது. பாதிப்பைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் நேற்று களப்பணியாளர்கள் மூலமாகவும் சோதனைச் சாவடி மூலமாகவும் 3442 பேருக்கு சோதனை நடத்தப் பட்டது. இதில் 764 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சோதனை செய்யப்பட்ட 25 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 764 பேரில் 408 பேர் ஆண்கள் 307 பேர் பெண்கள் 49பேர் குழந்தைகள் ஆவார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு 65 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 75 பேரும், கிள்ளீயூரில் 47பேரும், குருந்தன்கோட்டில் 73 பேரும், மேல்புறத்தில் 46 பேரும்,

    முன்சிறையில் 45 பேரும், ராஜாக்கமங்கலம் 56 பேரும், திருவட்டாறில் 26 பேரும், தோவாளையில் 67 பேரும், தக்கலையில் 67 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நெல்லையில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வந்த 4 பேருக்கும் கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் களப்பணியாளர்கள் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

    நாகர்கோவில் நகரில் பாதிப்பு தினமும் அதிகரித் துக்கொண்டே செல்கிறது. கடந்த வாரத் தொடக்கத்தில் 10க்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 100-ஐ கடந்தது. நேற்று நாகர்கோவிலில் மொத்தம் 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவிலில் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பெண் டாக்டர் ஒருவர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

    அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் மாநக ராட்சி அலுவலக ஊழியர்கள் 6 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர். மாவட்ட தீய ணைப்பு அலுவலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி, நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரி மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் வேலை பார்க்கும் 5 வீரர்களுக்கும், குளச்சல், திங்கள்சந்தை, கன்னியாகுமரி, தக்கலை தீயணைப்பு நிலையத்தில் வேலை பார்க்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் தீயணைப்புதுறையில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து சக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களுக்கு கொரோனா  சோதனை நடத்தப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    நாகர்கோவிலில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

    வங்கி முழுவதும் மாநக ராட்சி சுகாதார ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கோட்டார் பள்ளிவிளை வெட்டூர்ணிமடம் கிருஷ்ணன்கோவில் வடசேரி உள்பட நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு கொத்துக்கொத்தாக உயர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
     
    எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×