search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    வல்லம் சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதித்த 7 பேர் அனுமதி

    வல்லம் சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    வல்லம்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் பாதித்தவர்களுக்காக தனியாகச் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் வருகை அதிகரித்தால் எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை யொட்டி, வல்லத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. 

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அங்கு ஆய்வு செய்து தேவையான வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை யடுத்து அங்கு மருத்துவ உபகரணங்கள் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் உள்பட 
    7 பேர் வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா சிகிச்சை மைய வளாகத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வல்லம் பேரூராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு இதே வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 384 குடியிருப்பு வீடுகளில் ஆயிரக் கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
    Next Story
    ×