search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி பூமிபூஜையில் கலந்து கொண்ட போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் செந்தில் பாலாஜி பூமிபூஜையில் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

    ரூ.38. 24 கோடியில் சாலைகள் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் ரூ.38.24 கோடி மதிப்பில் சாலைகள் புனரமைப்புக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் ரூ.38.24 கோடி மதிப்பில் சாலைகள் புனரமைப்பு மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் 211 பணிகளை 115 இடங்களில் இன்று 8&ந்தேதி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.


    மாவட்ட கலெக்டர்பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிகளில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,  சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்  (குளித்தலை),  இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாம சுந்தரி (கிருஷ்ண ராயபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய திட்டப் பணிகளை பூமி பூஜையிட்டு துவக்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு  முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் கரூர் நகராட்சி  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, வளர்ச்சித்   திட்டப்பணிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர் மாநகராட்சி வார்டுகளில் பழுதடைந்த சாலைகளை புனரமைக்க வேண்டும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து  தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுஇன்று 29 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 18.2 கோடி மதிப்பி லான 173 புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும்,  32 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.17.55   கோடி  மதிப்பில் 37 கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் என மொத்தம்  211 பணிகள் ரூ.38.24 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 115 இடங்களில் இப்பணிகளுக்கான பூமி பூஜையிடும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.

    கரூர் மாவட்ட மக்களின் அனைத்து  தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின்  நல்லாட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
     
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் மோகன்ராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிர நிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×