search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சேதமடைந்த என்.என். கண்டிகை தரைப்பாலத்தை படத்தில் காணலாம்.
    X
    கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சேதமடைந்த என்.என். கண்டிகை தரைப்பாலத்தை படத்தில் காணலாம்.

    திருத்தணி, பள்ளிப்பட்டில் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் 4 தரைப்பாலங்கள் சேதம்

    திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகாக்களில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள 4 தரைப்பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராம மக்கள் அவதிக்குள்ளாயினர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் திருத்தணி அருகே உள்ள என்.என்.கண்டிகை பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் இந்த பகுதி வழியாக ஆந்திர மாநிலம் நாகலாபுரம் திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்த சிவாடா, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், நெமிலி, சந்தான கோபாலபுரம் போன்ற பகுதிகளுக்கு கிராம மக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    அதேபோல் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் எதிர்புறத்தில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் முத்துக் கொண்டாபுரம் என்ற இடத்தில் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் உள்ளது.இந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அடித்து செல்லப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்ல 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர். பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள சானாகுப்பம், சாமந்தவாடா ஆகிய பகுதிகளில் இருந்த இரண்டு தரைப்பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
    Next Story
    ×