search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் நகராட்சி
    X
    காங்கயம் நகராட்சி

    காங்கயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு

    சம்பந்தப்பட்ட முன்னாள் துப்புரவு ஆய்வாளர் மூன்று நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்புப்பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, முன்னாள் துப்புரவு ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் முத்துக்குமார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சியில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், கடந்த 2016 நவம்பர் 1-ந் தேதி 36 தற்காலிக கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த நியமனத்தில் எந்தவித அடிப்படை விதிகள், அரசாணை பின்பற்றாமல் நியமன குறிப்பு வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, நகராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் துப்புரவு ஆய்வாளர் மூன்று நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், 1973-ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரப்பணிகளின் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×