search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை வனப்பகுதியில் மழையால் நிரம்பிய தடுப்பணைகள்

    கோடை காலங்களில் ஏற்படுகின்ற வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது.

     இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுப்பூனை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக மேற்கு தொடர்ச்சிமலையை நம்பி உள்ளது.

    ஆனால் கோடைகாலங்களில் ஏற்படுகின்ற வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து அமராவதி அணையை நோக்கி பயணத்தை தொடங்கும் வனவிலங்குகள் வனப்பகுதியில் மழை பெய்து நீர்வரத்து ஏற்படும் வரை அடிவாரப் பகுதியிலேயே முகாமிடும். 

    இதனால் உடுமலை - மூணாறு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் வனப்பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களை தடுத்து ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை குடித்து விட்டு வனப்பகுதிக்குள் திரும்பி சென்று விடுகின்றன. 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. அத்துடன் வனப்பகுதியும் பசுமைக்கு மாறி வருகிறது. மழையின் காரணமாக வனவிலங்குகளுக்கான குடிநீர் மற்றும் உணவு தேவை தற்காலிமாக பூர்த்தி அடைந்துள்ளது.  
    Next Story
    ×