search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம் உத்தரவு
    X
    நீதிமன்றம் உத்தரவு

    திண்டிவனம் கொலை வழக்கு - கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை

    குற்றவாளிகள் இருவருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    திண்டிவனம்:

    2019 ம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காக தந்தை ராஜ், தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு ஏ.சி வெடித்து இறந்து விட்டதாக நாடகமாடிய வழக்கில் மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

    இந்நிலையில்,  மேற்கூறிய வழக்கில் இருவரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் இருவருக்கும்  தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    Next Story
    ×