search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    பண்டிகை நெருங்குவதால் உயர்ந்து வரும் பூக்கள் விலை

    ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பொம்மிடி உள்பட பல இடங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகிறது.
    சென்னை:

    பூக்கள் வரத்து அதிகமானதாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வந்து குவிந்த பூக்கள் லாரி கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது.

    ஒரு கிலோ ரோஜா ரூ.10, சம்பங்கி ரூ.10-க்கு விற்ற பிறகும் வாங்க ஆள் இல்லை. இதனால் கடந்த 16-ந்தேதி முதல் கடந்த 2 வாரங்களாக பூக்கள் வீணாகி வந்தது.

    நவராத்திரி நெருங்கி வருவதால் மீண்டும் பூ விலை உயர தொடங்கி இருக்கிறது. இன்று சாமந்தி ரூ.40-க்கு விற்றது. மல்லிகை கிலோ ரு.500-க்கு விற்பனையானது.

    ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பொம்மிடி உள்பட பல இடங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகிறது. தினமும் சராசரியாக 10 லாரி (100 டன்) ரோஜா உள்பட 100 டன் அனைத்து விதமான பூக்களும் வந்து குவிகிறது.

    நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு 13-ந்தேதி ஆயுத பூஜை நடைபெறும். அப்போது பூக்கள் விலை உயரும். எனவே 8 அல்லது 9-ந்தேதி வாக்கில் பூக்கள் அறுவடையை நிறுத்தி செடியிலேயே விட்டு விடுவார்கள்.

    13-ந்தேதிக்கு பிறகு பூ விற்பனை சூடு பிடிக்கும். அப்போதுதான் மீண்டும் அறுவடை செய்வார்கள் என்றார் பூ மொத்த வியாபாரி பாண்டியன்.
    Next Story
    ×