search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமுருகன்பூண்டி காவல் நிலையம்.
    X
    திருமுருகன்பூண்டி காவல் நிலையம்.

    திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம்-துணை கமிஷனர் அரவிந்த் அடிக்கல் நாட்டினார்

    சுமார் ரூ.1கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்பட உள்ளன.
    திருப்பூர்:

    2018-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி முதல் திருமுருகன்பூண்டி போலீஸ்நிலையம் திருமுருகன்பூண்டியில் உள்ள அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் போலீசாருக்கும்  புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் போதுமான இடவசதி இல்லாமல் திருமுருகன்பூண்டி போலீஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடத்தில் போலீஸ் நிலையம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. 

    இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையத்தில் போலீஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போலீஸ் நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா  நடைபெற்றது.

    இதில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை  கமிஷனர் அரவிந்த் கலந்து கொண்டு போலீஸ் நிலைய கட்டிடத்திற்குஅடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.1கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்பட உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் கந்தசாமி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் மணவாளன், உதவி பொறியாளர் கோமதிசங்கர் உள்பட திருமுருகன்பூண்டி போலீசார் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×