search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா சிகிச்சை மையங்களில் காலியாகும் படுக்கைகள்

    புதிதாக தொற்று பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக படுக்கை வசதி கிடைப்பதோடு தொற்று குறைந்து வருவதன் மூலம் பொதுமக்களும் அடுத்த கட்ட தளர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த  2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியது. ஆக்சிஜன் படுக்கை வசதியும் அதிகம் தேவைப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வந்து அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்றார்.

    இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 1316 ஆக்சிஜன் படுக்கைகளில் 696 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.

    மேலும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,288 படுக்கைகள் காலியாக இருப்பதோடு கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்களில் 1677 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் புதிதாக தொற்று பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக படுக்கை வசதி கிடைப்பதோடு தொற்று  குறைந்து வருவதன் மூலம் பொதுமக்களும் அடுத்த கட்ட தளர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    Next Story
    ×