search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளத்தில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை ஞானதிரவியம் எம்.பி., வழங்கிய போது எடுத்த படம்.
    X
    ஆலங்குளத்தில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை ஞானதிரவியம் எம்.பி., வழங்கிய போது எடுத்த படம்.

    ஆலங்குளத்தில் 251 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் - எம்.பி.க்கள் ஞானதிரவியம் தனுஷ்குமார் வழங்கினர்

    ஆலங்குளத்தில் 251 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, 251 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினர். பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 8 கிராம் எடை கொண்ட தங்கம் வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 18 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, மாரிவண்ணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலங்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட இடத்தினை ஆய்வு செய்தனர்.

    இதேபோல் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், 132 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், முத்துகிருஷ்ணன், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, ராஜகோபால், நகர செயலாளர் சேரன்மாதேவி மனிஷா செல்வராஜ், கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் டேவிட் ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்பை யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினார். தொடர்ந்து சுகாதார பணியாளர்களுக்கு கொேரானா நிவாரண பொருட்கள் மற்றும் சமூகநலத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு கொேரானா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் மணி, விஜய் செல்வி, அம்பை ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரணி சேகர், நகர செயலாளர்கள் அம்பை பிரபாகரன், கல்லிடைக்குறிச்சி இசக்கி பாண்டியன், விக்கிரமசிங்கபுரம் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அம்பை திருமஞ்சன சாலையிலுள்ள ஒரு ரேஷன் கடையில் ஞானதிரவியம் எம்.பி. கொரோனா நிவாரண நிதியாக இரண்டாம் கட்டமாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார்.

    மானூர் யூனியன் பகுதியில் 162 பேருக்கு தாலிக்கு தங்கத்தை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சமூக நல விரிவாக்க அலுவலர் வெள்ளத்தாய் செய்திருந்தார். திட்டப்பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×