search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் ஒரே நாளில் 10,720 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10,720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி, தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா வைரஸ் தொற்றில்  இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையிலும்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று  எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது  என்ற விவரத்தை  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
     
    இங்கு முதல் டோஸ் தடுப்பூசி10,219 பேருக்கும், 2-வது டோஸ்  501 பேருக்கும்  செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில்  மொத்தம்  10,720பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அடுத்ததாக திருச்சி மாவட்டத்தில் முதல் டோஸ்  5,933 பேருக்கும், 2-வது டோஸ்  234 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.  மதுரை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட ங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
     
    பின்னலாடை நகரமான  திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான  நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.  தொடர்ந்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×