search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முதியவரின் கொரோனா சிகிச்சைக்கு ரூ.19லட்சம் வசூல்

    திருப்பூரில் முதியவரின் கொரோனா சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி மகன்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). இவரது மகன்கள் கார்த்திக்கேயன், ஹரிகிருஷ்ணன்.இந்தநிலையில் சுப்பிரமணியனுக்கு கடந்த 3-ந்தேதி கொரோனா அறிகுறி காணப்பட்டது.இதையடுத்து அவரை மகன்கள் இருவரும் பெருமாநல்லூர் கோவை  சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 3-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை  சிகிச்சை அளிப்பதற்காக  ரூ.19லட்சத்து  5ஆயிரம் வரை  கார்த்திக்கேயன், ஹரிகிருஷ்ணன் கட்டணம்  செலுத்தியுள்ளனர்.
      
    இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும், சுப்பிரமணியனை  வேறு  மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடுமாறும் மருத்துவ மனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      
    இதையடுத்து சுப்பிரமணியனை மகன்கள் இருவரும் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் படுக்கைவசதி கிடைக்காமல் சுப்பிரமணியன் பரிதாபமாக  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே  சகோதரர்கள் இருவரும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை செயலர் மற்றும் திருப்பூர் கலெக்டர் ஆகியோருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    எங்கள் தந்தையை சாதாரண கொரோனா தொற்று  காரணமாக பெருமாநல்லூர் கோவை சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக  கடந்த 3-ந்தேதி அனுமதித்தோம்.அங்கு முறையான  சிகிச்சை அளிக்காமல் ரூ.19லட்சத்து 5ஆயிரத்தை கட்டணமாக வசூல் செய்து விட்டு எந்த ஒரு முறையான பில்லும் வழங்கவில்லை. மேலும் 3-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தை நல்லமுறையில் இருந்தார்.
      
    ஆனால் எந்த சிகிச்சையும் அளிக்காமல்  அலட்சியமாக   மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் இருந்தனர். இதன் காரணமாக எங்களது தந்தை சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து உரியவிசாரணை நடத்தி அதிக கட்டணம் வசூலித்து விட்டு அலட்சியமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்ப துடன்  அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தர  நடவடிக்கை எடுக்க வேண் டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×