search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருப்பூரில் தொற்று பாதிப்பு குறைகிறது

    திருப்பூர் மாவட்டத்தில் 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். மேலும் சித்தா சிகிச்சை பெற்ற 573 பேர் குணமடைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது.தினசரி பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியதால்  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த  4 நாட்களாக  தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
     
    அதன்படி நேற்று ஒரே நாளில்  1,373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள்  திருப்பூர், கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60ஆயிரத்து 947ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரேநாளில்  12 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 475ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியேறுவதாக  சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து விதிகளை மீறும் நோயாளிகளுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சித்தா சிகிச்சை  பெறுவதற்காக  திருப்பூர் பத்மினி கார்டன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதில் சிகிச்சை பெற்ற 573 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது  57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    Next Story
    ×