search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

    கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு -வீடாகச் சென்று பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் வெப்ப அளவினை கண்டறியும் பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    கோவை:

    கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி பகுதியில் வார்டு எண் 34-க்குட்பட்ட நேரு நகர் கிழக்குப் பகுதி இளங்கோ நகரில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளையும், வார்டு எண்.33-க்குட்பட்ட பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளையும் ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

    தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை, பால் போன்ற பொருட்கள் கிடைக்கப்பெறுகின்றனவா என ஆய்வு மேற்கொண்ட பின் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். காலை, மாலை இருவேளையும் கிருமிநாசினி கொண்டு வீடுகளை சுத்தம் செய்திட வேண்டும் என தெரிவித்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னர் அப்பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு -வீடாகச் சென்று பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் வெப்ப அளவினை கண்டறியும் பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.34 வீரியம் பாளையத்தில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட பின் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது, மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×