search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும், பெண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 458 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் சேர்ந்து வாக்குபதிவு செய்வதற்காக 132 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. மேலும் ஆண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும், பெண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.

    மொத்த வாக்குசாவடி 458-ல் வடபழஞ்சி, கீழகுயில்குடி, நாகமலை புதுக்கோட்டை, பெருங்குடி, கூத்தியார்குண்டு, நிலையூர்கொம்பாடி, பனையூர்,தனக்கன்குளம், சாக்கிலிப் பட்டி, பாரபத்தி, சிலைமான் ஆகிய ஊராட்சிகளில் சாதி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடந்த காலத் தேர்தல்களில் பதற்றம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று காவல்துறை மூலம் கண்டறிப்பட்டு உள்ளது.

    எனவே வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் மாதம் 6-ந்தேதி அன்று பதற்றமான வாக்குசாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

    மேலும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

    இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசுவரி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மூர்த்தி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
    Next Story
    ×