search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    கோவில்பட்டியில் போலீசாரை கண்டித்து சாலைமறியல் - 164 பேர் கைது

    கோவில்பட்டியில் போலீசாரை கண்டித்து சாலைமறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 164 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த போலீசாரை கைது செய்ய வலியுறுத்தியும், போலீசாரைக் கண்டித்தும், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி கோவில்பட்டி மெயின் ரோடு தனியார் விடுதி முன்பிருந்து பல்வேறு அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா, பொருளாளர் பொன்ராஜ், மனித உரிமை காக்கும் கட்சி தலைமை நிலைய செயலாளர் சொக்கலிங்கம், பசும்பொன் முன்னேற்ற கழக தலைமை நிலைய செயலாளர் அய்யனார் பாண்டியன், மாவட்ட செயலாளர் முருகன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 95 பெண்கள் உள்பட 164 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    Next Story
    ×