search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் திடீர் தர்ணா

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அமர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    விழுப்புரம்:

    திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் வசித்து வருபவர் குப்பன் (வயது 73) . ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான இவர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். புதிய காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ செலவினை வட்டியுடன் வழங்க உத்தரவு வழங்கியும் 6 ஆண்டு காலமாக மருத்துவ தொகையை வட்டியுடன் வழங்க மறுக்கும் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்தும், தனக்கு உடனடியாக மருத்துவ தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்கக்கோரியும் அவர் கோஷம் எழுப்பினார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று குப்பனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டார்.
    Next Story
    ×