search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் வாழைத்தார்கள் விற்பனை அமோகம்

    தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விற்பனை நேற்று அமோகமாக நடந்தது. வாழைத்தார் ஒன்று ரூ.250 முதல் ரூ.900-ம் வரை விற்பனை செய்யப்பட்டது. இலைக்கட்டு ரூ.1000-ம் முதல் ரூ.2,500-க்கு விற்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    நவராத்திரி விழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நவராத்திரி விழாவையொட்டி வாழைத்தார், இலைகள் மற்றும் பூக்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் வாழைத்தார்கள் அதிக அளவில் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று நாட்டு வாழைத்தார் ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.250-க்கும், பச்சை வாழை ரூ.350-க்கும், செவ்வாழை ரூ.800 முதல் ரூ.900 வரையும், ஏத்தம் பழம் ரூ.450-க்கும், கதளி ரூ.250-க்கும், பூலான்செண்டு ரூ.700 முதல் ரூ.800 வரையும், சக்கை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இதேபோன்று வாழை இலைக்கட்டும் அதிக அளவில் விற்பனையானது. நேற்று சிறிய இலைக்கட்டுகள் ரூ.1000-க்கும், பெரிய இலைக்கட்டுகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரையும் விற்பனையானது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    மற்ற நாட்களில் வாழைத்தார் மற்றும் இலைக்கட்டுகள் மதியம் வரை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும். ஆனால், நேற்று பெரும்பாலான கடைகளில் காலையிலேயே வாழைத்தார்களும், இலைக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×